மாவட்ட பொது சுகாதாரத்துறையில் வேலை.. ரூ.23,000 சம்பளம்.. உடனே விண்ணப்பிங்க..!

job 5

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மாவட்ட நலவாழ்வு சங்கம் வெளியிட்டுள்ளது.


பணியிட விவரம்:

மூத்த சிகிச்சை மேற்பார்வையாளர் – 1
லேப் டெக்னீஷியன் – 2
டிரைவர் – 1
டிபி- மருத்துவ பார்வையாளர் – 1
பல் மருத்துவ உதவியாளர் – 1
சிகிச்சை உதவியாளர் (சித்தா) – 1
சிறப்பு கல்வியாளர் உடன் சமூகப் பணியாளர் – 1
சிறப்பு கல்வியாளர் – 1

சம்பளம்:

மூத்த சிகிச்சை மேற்பார்வையாளர் – ரூ.19,800
லேப் டெக்னீஷியன் – ரூ.13,000
டிரைவர் – ரூ.13,500
டிபி- மருத்துவ பார்வையாளர் – ரூ.13,300
பல் மருத்துவ உதவியாளர் – ரூ.13,800
சிகிச்சை உதவியாளர் (சித்தா) – ரூ.15,000
சிறப்பு கல்வியாளர் உடன் சமூகப் பணியாளர் – ரூ.17,000
சிறப்பு கல்வியாளர் – ரூ.23,000

வயது வரம்பு: இப்பணியிடங்களுக்கு 59 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். டிரைவர் மற்றும் பல் மருத்துவ உதவியாளர் பதவிக்கு 35 வயதிற்கு உட்பட்டவராகவும், சிறப்பு கல்வியாளர் பதவிக்கு 40 வயதிற்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

* மூத்த சிகிச்சை மேற்பார்வையாளர் பதவிக்கு சுகாதார ஆய்வாளர் சான்றிதழ் படிப்புடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி இயக்கத்தில் சான்றிதழ் மற்றும் 2 சக்கர வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

* லேப் டெக்னீஷியன் பதவிக்கு 12ஆம் வகுப்பிற்குப் பின் டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு அவசியமாகும். டிரைவர் பதவிக்கு பள்ளி கல்வித் தகுதி மற்றும் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் கொண்டிருக்க வேண்டும்.

* டிபி – மருத்துவ பார்வையாளர் பதவிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது சுகாதாரத் துறை சார்ந்த சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். பல் மருத்துவ உதவியாளர் பதவிக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சம்பந்தப்பட்ட பணியனுபவம் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

* சிகிச்சை உதவியாளர் (சித்தா) பதவிக்கு சித்தா துறையில் டிப்ளமோ படிப்பு போதுமானது. அதேபோல், சிறப்பு கல்வியாளர் உடன் சமூகப் பணியாளர் பதவிக்கு பிசியோ தெரபி, சிறப்பு மொழி (ஸ்பீச் தெரபி), ஆக்குபேஷனல் தெரபி ஆகிய படிப்புகளை முடித்தவர்கள் அல்லது சிறப்பு கல்விக்கான பி.எட் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

* சிறப்பு கல்வியாளர் பதவிக்கு சிறப்பு கல்விக்கான இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நலவாழ்வு சங்கம் தெரிவித்துள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது? கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு தகுதியும், ஆர்வமுள்ளவர்கள் https://kallakurichi.nic.in/ என்ற மாவட்ட இணையதளத்தில் இதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை நேரிலோ, தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ சமர்பித்து விண்ணப்பிக்கலாம்.

முகவரி:

உறுப்பினர் செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம்,
மாவட்ட சுகாதார அலுவலகம்,
பெருவங்கூர் ரோடு, கள்ளக்குறிச்சி – 606 213.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.12.2025 மாலை 5 மணி வரை.

Read more: Flash : காலையிலேயே குட்நியூஸ்.. தங்கம் விலை இன்று குறைந்தது.. எவ்வளவு தெரியுமா?

English Summary

Job in the District Public Health Department.. Salary Rs.23,000.. Apply immediately..!

Next Post

7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குறீங்களா.? அப்ப இந்தப் பிரச்சனைகளை சந்திக்க ரெடியா இருங்க..!

Tue Dec 9 , 2025
ஆரோக்கியமாக இருக்க நல்ல உணவு மற்றும் உடற்பயிற்சி செய்வது முக்கியம் என்பது போல, நல்ல தூக்கமும் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு அவசியம். 7 முதல் 9 மணிநேர தூங்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.. ஆனால் இப்போதெல்லாம், பலர் தூக்கமின்மையால் அவதிப்படுகிறார்கள். அவர்கள் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், அவர்களால் சரியாக தூங்க முடியவில்லை. இந்த தூக்கமின்மையால், அவர்கள் பல உடல்நலப் பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. நீங்கள் ஒவ்வொரு […]
sleep less 1 1

You May Like