மத்திய அரசு வெளியுறவு துறையின் கீழ் செயல்படும் புலனாய்வுத்துறையில் (Intelligence Bureau – IB) ஏராளமான பணி வாய்ப்புகள் இந்த ஆண்டுக்குள் நிரப்பப்பட உள்ளன. அதில் ஒரு கட்டமாக, 2025-ம் ஆண்டுக்கான “Assistant Central Intelligence Officer (ACIO) Grade-II” பதவிக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த முறை, தொழில்நுட்ப பிரிவில் மொத்தம் 258 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் துறையில் படித்து, GATE தேர்வில் தகுதிப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என மத்திய புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. விண்ணப்பங்கள் தேசிய அளவில் பெறப்படுகின்றன. தேர்வில் வெற்றி பெறுவோர் மத்திய அரசின் முக்கிய புலனாய்வுத்துறையில் பணியாற்றும் வாய்ப்பு பெறுவார்கள்.
பணியிட விவரம்:
கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் – 90
எலெக்ட்ரிக்கல் மற்றும் கம்யூனிகேஷன் – 168
இட ஒதுக்கீடு
- பொதுப்பிரிவு: 114
- EWS: 21
- OBC: 68
- SC: 37
- ST: 18
வயது வரம்பு: 18 முதல் 27 வயது வரை இருக்கலாம். வயது வரம்பில் தளர்வு வழங்கப்படுகிறது.
கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட துறைகளில் இளங்கலை அல்லது முதுகலை பொறியியல் (B.E./B.Tech அல்லது M.E./M.Tech) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- எலெக்ட்ரிக்கல்
- எலெக்ட்ரானிக்ஸ்
- டெலிகம்யூனிகேஷன்
- கம்யூனிகேஷன்
- தகவல் தொழில்நுட்பம்
- கணினி அறிவியல்
16.11.2025 தேதியின்படி கல்வித் தகுதி சரிபார்க்கப்படும். மேலும், விண்ணப்பிக்க 2023, 2024 அல்லது 2025 ஆண்டுகளில் நடைபெற்ற GATE தேர்வில் தகுதி பெற்றிருப்பது கட்டாயம். விண்ணப்பங்கள் தேசிய அளவில் ஆன்லைன் வழியாக பெறப்படுகின்றன. தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: மத்திய அரசு ஊதிய விதிமுறைகளின் அடிப்படையில் நிலை 7 கீழ் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
* இப்பணியிடங்களுக்கு தனியான எழுத்துத் தேர்வு இல்லை.
* விண்ணப்பதாரர்கள் GATE தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பாய்வு செய்யப்படுவார்கள்.
* ஒவ்வொரு காலியிடத்திற்கும் 10 மடங்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு திறன் தேர்வு மற்றும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
* விண்ணப்பதாரர்கள் தாங்கள் பெற்ற அதிகபட்ச GATE மதிப்பெண்களை சமர்ப்பிக்கலாம். தேர்வுக்கான தேதி மற்றும் நேரம் விண்ணப்பதாரர்களுக்கு இமெயில் மூலம் தெரிவிக்கப்படும்.
* அனைத்து கட்ட மதிப்பெண்களையும் இணைத்து மொத்த மதிப்பெண் அடிப்படையில் இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்படும். பின்னர், தேர்வானவர்கள் நன்னடத்தை சான்றிதழ் மற்றும் மருத்துவ பரிசோதனை கடந்து தற்காலிக நியமனம் பெறுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: புலனாய்வுத்துறையில் இருக்கும் காலிப்பணியிடங்கள் https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/96338/Index.html என்ற இணைப்பில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கட்டணமாக ரூ.200 வசூலிக்கப்படுகிறது. வகுப்பு ஒதுக்கீடு பிரிவினருக்கு ரூ.100 கட்டணமாக நிரண்யிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள் 16.11.2025



