புலனாய்வு துறையில் (Intelligence Bureau) பணி செய்ய விரும்புவோருக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப பிரிவில் ஜூனியர் புலனாய்வு அதிகாரி (Junior Intelligence Officer – JIO) பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள் – 394
பொதுப் பிரிவு – 157, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் – 32, ஒபிசி – 117, எஸ்சி – 60, எஸ்டி – 28 என நிரப்பப்படுகிறது. இப்பதவிக்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க இயலாது.
வயது வரம்பு: ஜூனியர் புலனாய்வு அதிகாரி (Junior Intelligence Officer) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது 27 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும்.
அரசு வழங்கியுள்ள தளர்வுகள்:
- SC / ST பிரிவினருக்கு – 5 வருடங்கள்
- OBC பிரிவினருக்கு – 3 வருடங்கள்
- அரசு துறையில் பணியாற்றுவோர் – அதிகபட்சம் 40 வயது வரை
- விளையாட்டு வீரர்களுக்கு அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை தளர்வு வழங்கப்படும்.
- கணவரை இழந்தவர்கள், விவாகரத்து பெற்றவர்கள், அல்லது கணவரை சட்டப்படி பிரிந்து வாழும் பெண்களுக்கு சிறப்பு தளர்வுகள் உண்டு.
- SC / ST பெண்கள் – 40 வயது வரை
- OBC பெண்கள் – 38 வயது வரை
- பொது பிரிவு பெண்கள் – 35 வயது வரை
கல்வித்தகுதி: புலனாய்வு பிரிவில் உள்ள இப்பணியிடங்களுக்கு எலெக்ட்ரானிக்ஸ்/ எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்/ எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன்/ எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ்/ தகவல் தொழில்நுட்பம்/ கணினி அறிவியல்/ கணினி பொறியியல்/ கணினி பயன்பாடு ஆகியவற்றில் பொறியியல் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
எலெக்ட்ரிக்கல்/கணினி அறிவியல்/ இயற்பியல்/ கணிதம் ஆகியவற்றில் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு (B.Sc) அல்லது கணினி பயன்பாட்டில் இளங்கலை பட்டப்படிப்பு (BCA) முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ஜூனியர் புலனாய்வு அதிகாரி (Junior Intelligence Officer) பதவிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு, நிலை – 4 (Pay Level – 4) கீழ் சம்பளம் வழங்கப்படும்.
- அடிப்படை சம்பளம்: ₹25,500 முதல் அதிகபட்சம் ₹81,000 வரை
- சிறப்பு பாதுகாப்பு தொகை: அடிப்படை சம்பளத்தில் கூடுதலாக 20% வழங்கப்படும்
- விடுமுறை நாட்களில் பணியாற்றினால்: தனியாக கூலி வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஜூனியர் புலனாய்வு அதிகாரி பணியிடங்களுக்கு தேர்வு மூன்று கட்டங்களாக நடைபெறும்.
1.எழுத்துத் தேர்வு (Written Exam)
- கொள்குறி (Objective Type) முறையில் நடைபெறும்.
- மொத்த மதிப்பெண்கள் – 100.
- இதில் Cut-off மதிப்பெண்களை எட்டுபவர்கள் மட்டுமே அடுத்த கட்டத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
2.திறன் தேர்வு & நேர்காணல் (Skill Test & Interview)
- எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பங்கேற்கலாம்.
3.மருத்துவ பரிசோதனை (Medical Examination)
- திறன் தேர்வு மற்றும் நேர்காணலில் வெற்றி பெற்றவர்களின் உத்தேச பட்டியல் (Provisional List) வெளியிடப்படும்.
- அதன் பின்னர் மருத்துவ பரிசோதனையில் தகுதி பெற்றவர்களின் இறுதி தேர்வு பட்டியல் அறிவிக்கப்படும்.
இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் தற்காலிகமாகவே பணியமர்த்தப்படுவார்கள். இருப்பினும், நிர்வாக விதிமுறைகளுக்கு ஏற்ப பணி நிரந்தரம் செய்யப்படுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது? . இதற்கான ஆன்லைன் விண்ணப்ப இணைப்பை https://www.mha.gov.in/ என்ற இணையதளத்தில் இருந்து பெற்றுகொள்ளலாம். விண்ணப்பம் ஆகஸ்ட் 23 தேதியே தொடங்கிய நிலையில், செப்டம்பர் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
Read more: தீபாவளி பரிசு இல்லை… தசராவுக்கு முன்பே ஜாக்பாட்! மோடி அரசு சொல்லப் போகும் குட்நியூஸ்..