மயிலாடுதுறை மாவட்டத்தில் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மிஷன் சக்தி திட்டத்தின் கீழ், மாவட்ட மகளிர் அதிகார மையம் (District Level Centre for Women) செயல்பட்டு வருகிறது. இந்த மையம், மகளிர் நலனுக்கான மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களின் செயல்பாடு, நிதி ஒதுக்கீடு மற்றும் பயன்களை கண்காணிப்பதோடு, பல்வேறு சேவைகளை ஒருங்கிணைத்து வழங்குகிறது.
இந்த பணிக்காக மாவட்ட சமூகநல அலுவலரின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. தகவல் தொழில்நுட்ப உதவியாளா்
காலியிடம்: 2
சம்பளம்: மாதம் ரூ.20,000 (தொகுப்பூதியம்)
வயது வரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
- கணினி அறிவியல் / தகவல் தொழில்நுட்பம் / கணினி பயன்பாடு துறையில் இளங்கலைப் பட்டம் (B.Sc / BCA / B.Tech).
- கணினி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்:
* குறைந்தபட்சம் 3 வருட அனுபவம்.
* தரவு மேலாண்மை, செயல்முறை ஆவணங்கள் தயாரித்தல், இணைய அடிப்படையிலான செயல்முறைகள், அல்லது அரசு / அரசு சாரா தொண்டு நிறுவனங்களில் (NGO) திட்ட பணிகள் செய்த அனுபவம் இருக்க வேண்டும்.
பணி: பல்நோக்கு பணியாளா்
காலியிடம்: 1
2. உதவி பணியாளர்
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு வாரியத்திலிருந்தும் 10 அல்லது 12-ஆம் வகுப்பு தேர்ச்சி.
சம்பளம்: மாதம் ரூ.12,000 (தொகுப்பூதியம்).
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பப் படிவத்தை Mayiladuthurai.in என்ற மயிலாடுதுறை மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப / நேரில் சமர்ப்பிக்க வேண்டும்:
முகவரி:
மாவட்ட சமூகநல அலுவலர்,
மாவட்ட சமூகநல அலுவலகம்,
5-ஆம் தளம், அறை எண்: 524,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மயிலாடுதுறை.விண்ணப்பிக்க கடைசி தேதி: 22 ஆகஸ்ட் 2025.
Read more: வெஸ்டர்ன் டாய்லெட் Flush-ல் இரண்டு பட்டன்கள் இருப்பது ஏன் தெரியுமா..? பலருக்கும் தெரியாத தகவல்..