ரயில்வே தொழில்நுட்ப பிரிவில் வேலை.. ரூ.1,40,000 வரை சம்பளம்..!! செம சான்ஸ்.. விட்றாதீங்க

job

ரயில்வேயின் இணைய சேவை வழங்கும் நிறுவனமான ரயில்டெல் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


பணியின் விவரங்கள்:
உதவி மேனேஜர் – 30
டெபியூட்டி மேனேஜர் – 18

வயது வரம்பு: உதவி மேனேஜர் பதவிக்கு குறைந்தபட்சம் 21 முதல் அதிகபடியாக 28 வயது வரை இருக்கலாம். டெபியூட்டி மேனேஜர் பதவிக்கு குறைந்தபட்சம் 21 முதல் அதிகபடியாக 30 வரை இருக்கலாம். இப்பதவிகளுக்கான வயது வரம்பில் மத்திய அரசின் விதிமுறைகளின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 வருடங்கள் தளர்வு உள்ளது.

கல்வித்தகுதி: டெக்னிக்கல் பிரிவு உதவி மேனேஜர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் எலெக்ட்ரிக்கல் அலல்து இதர பொறியியல் பிரிவுகளில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 5 வருடம் வரை தளர்வு உள்ளது.
மார்க்கெட்டிங் உதவி மேனேஜர் பதவிக்கு எம்பிஏ அல்லது தொழில் நிர்வகத்தில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அனுபவம் அவசியமில்லை.

நிதிப்பிரிவு உதவி மேனேஜர் பதவிக்கு எம்பிஏ அல்லது தொழில் நிர்வகத்தில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். இப்பதவிக்கு அனுபவம் அவசியமில்லை.
தொழில்நுட்ப பிரிவில் உள்ள டெபியூட்டி மேனேஜர் பதவிக்கு எலெக்ட்ரிக்கல், டெலிகாம், கணினி அறிவியல், தகவல் தொடர்பியல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் கட்டாயம் 2 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்: உதவி மேனேஜர் பதவிக்கு மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரையும், டெபியூட்டி மேனேஜர் பதவிக்கு மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.railtel.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.1,200 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.600 செலுத்த வேண்டும். இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் கடந்த மே இறுதியில் தொடங்கிய நிலையில், வரும் ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம். தேர்விற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.06.2025

Read more: தீயாய் பரவும் கொரோனா.. கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் பலி..!! மீண்டும் லாக்டவுன்..?

Next Post

அமெரிக்க ராணுவ அணிவகுப்பு: பாகிஸ்தான் தளபதிக்கு அழைப்பு..? - வெள்ளி மாளிகை விளக்கம்

Sun Jun 15 , 2025
அமெரிக்க ராணுவத்தின் 250வது ராணுவ அணிவகுப்புக்கு பாகிஸ்தான் ராணுவத் தளபதி சையத் அசிம் முனீர் அழைக்கப்பட்டதாகக் கூறப்படும் செய்திகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது. ஆங்கில நாளிதழான தி இந்துவில் வெளியான செய்தியின்படி, அந்தச் செய்தி தவறானது என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெளிவுபடுத்தினார். “250வது நிறுவன தின ராணுவ அணிவகுப்புக்கு எந்த வெளிநாட்டு ராணுவத் தலைவரும் அழைக்கப்படவில்லை” என்று அவர் கூறினார். ஜூன் 14 ஆம் தேதி நடைபெறும் விழாவில் […]
Army Chief General Asim Munir

You May Like