HCL நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! நாளை நேர்காணல்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!! விவரம் உள்ளே..!!

job 6

சென்னை செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனமான எச்.சி.எல். டெக்னாலஜிஸ் (HCL Tech), தற்போது Process Associate/Associate (Voice Process) பணி இடங்களுக்கான புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணிக்கான நேர்காணல் வரும் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் B.Com, BBA, MBA, M.Com, B.Sc, மற்றும் BCA போன்ற பட்டப் படிப்புகளை முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். முக்கியமாக, விண்ணப்பதாரர்களுக்கு அரியர்ஸ் இருக்கக் கூடாது என்பது கட்டாயமாகும்.


இந்தப் பணிக்கு 0 முதல் 1 ஆண்டு வரை பிபிஓ (BPO) பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அனுபவம் உள்ளவர்கள் Relieving Letter அல்லது ராஜினாமா ஏற்பு கடிதத்தை வைத்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்கள் சென்னையில் உள்ள சோழிங்கநல்லூர் எச்.சி.எல். அலுவலகத்தில் பணியமர்த்தப்படுவார்கள். நேர்காணலில் பங்கேற்பவர்கள் எம்.எஸ். ஆபிஸ் மற்றும் குறிப்பாக எக்செல் (Excel) திறமை அவசியம். VLOOKUP, Pivot Tables போன்றவற்றில் பணியாற்றும் திறன் தேவை.

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். டேட்டா துல்லியம், ஆவணங்களைச் சரிபார்க்கும் திறன், மல்டிபிள் டாஸ்க்கிங், மற்றும் ஒருங்கிணைப்பு (Co-ordination) திறன்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இந்தப் பணி யு.எஸ். ஷிப்ட் (US Shift) என்பதால், தேர்வாகும் நபர்கள் இரவுப் பணி பார்க்கத் தயாராக இருக்க வேண்டும். பணிக்கான சம்பளம் பற்றிய விவரங்கள் இறுதிச் சுற்று நேர்காணலின்போது, விண்ணப்பதாரரின் அனுபவம் மற்றும் திறமையைப் பொறுத்துத் தெரிவிக்கப்படும்.

நேர்காணல் நடைபெறும் இடம் :

இந்தப் பணிக்கான நேர்காணல் அக்டோபர் 6ஆம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும். நேர்காணலில் கலந்துகொள்ள விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்குச் செல்ல வேண்டும். HCL Tech, Tower 4, Elcot SeZ, Sholinganallur, Chennai, Tamil Nadu 600 119.

மேலும் விவரங்களுக்கு : https://www.linkedin.com/jobs/view/4310138732?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH

Read More : சொந்த ஊர் மக்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட தனுஷ்..!! தலைக்கனம் ஓவரா இருக்கு..!! திடீரென வெடித்த சர்ச்சை..!!

CHELLA

Next Post

இளம் வயதிலேயே முடி உதிர்வு பிரச்சனையா..? வீட்டிலேயே தயாரிக்கலாம்..!! சூப்பர் ரிசல்ட்..!!

Sun Oct 5 , 2025
இளம் தலைமுறையினர் முதல் நடுத்தர வயதினர் வரை இன்று பலரும் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனை நீண்டகால முடி உதிர்வு ஆகும். இந்தப் பிரச்சனை அதிகரித்து வரும் நிலையில், பிரபல ஆரோக்கிய மற்றும் நலவாழ்வு நிபுணர் டிம்பிள் ஜங்கடா, முடி உதிர்வுக்கான முக்கிய காரணங்களையும், அதைத் தடுக்க வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய சிகிச்சை முறைகளையும் விளக்கியுள்ளார். இரும்புச்சத்துக் குறைவு : முடி வேர்கள் ஓய்வு நிலைக்குச் சென்றுவிடுவதால் தான் அதிக அளவில் […]
hair loss 1

You May Like