நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, தற்போது 349 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. துணைப் பொது மேலாளர், உதவிப் பொது மேலாளர், தலைமை மேலாளர் போன்ற பல்வேறு பதவிகளுக்குத் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ.1.40 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.
பதவிகள் மற்றும் தகுதிகள் :
இந்தப் பணியிடங்கள் டிஜிட்டல் பேங்கிங், டேட்டா அனலிஸ்ட், ஐ.டி. செக்யூரிட்டி, பிசினஸ் அனலிஸ்ட், ஜாவா டெவலப்பர், மொபைல் ஆப் டெவலப்பர் என மொத்தம் 41 வகையான மேலாளர் பதவிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதியைப் பொறுத்தவரை, ஒவ்வொரு பதவிக்கும் மாறுபடுகிறது. பொதுவாக, B.E/B.Tech, MBA, MCA, M.Sc போன்ற படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பெரும்பாலான பதவிகளுக்குப் பணி அனுபவம் கேட்கப்பட்டுள்ளது.
தேர்வு மற்றும் விண்ணப்ப விவரங்கள் :
இந்தப் பணியிடங்களுக்குத் தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மற்றும் கலந்துரையாடல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் :
விண்ணப்பக் கட்டணமாக, பொதுப் பிரிவினர் ரூ.1,180 செலுத்த வேண்டும். SC/ST மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற பிரிவினருக்கு ரூ.118 மட்டுமே கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தை ஆன்லைன் வழியாக மட்டுமே செலுத்த முடியும். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 30.09.2025 ஆகும். எனவே ஆர்வமுள்ளவர்கள், கடைசி தேதிக்கு முன் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு https://bankofmaharashtra.in/writereaddata/documentlibrary/34e5d288-8ca4-400f-b7af-60fe7a44d286.pdf?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.



