இந்தியன் வங்கியில் 2025-ஆம் ஆண்டுக்கான சிறப்பு அதிகாரிகள் பிரிவில் பல்வேறு துறைகளில் 171 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலிப்பணியிட விவரம்:
தலைமை மேனேஜர் – 41
சீனியர் மேனேஜர் – 70
மேனேஜர் – 60
வயது வரம்பு:
- தலைமை மேனேஜர் பதவிக்கு 28 முதல் 36 வயது வரை இருக்கலாம்.
- சீனியர் மேனேஜர் பதவிக்கு 25 முதல் 33 வரை இருக்கலாம்.
- மேனேஜர் பதவிக்கு 23 முதல் 31 வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி:
தகவல் தொழில்நுட்ப (IT) துறை: கணினி அறிவியல், கணினி பயன்பாடு, தகவல் தொழில்நுட்பம், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேஷன் உள்ளிட்ட பிரிவுகளில் 4 வருட பொறியியல் படிப்பு அல்லது முதுகலை பட்டப்படிப்பு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
கடன் (Credit) துறை: சிஏ / பட்டப்படிப்பு + 2 வருட MBA/PG டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ரிஸ்க் மேனேஜ்மெண்ட் துறை: CA / CFA அல்லது கணிதம், நிதி, பொருளாதாரம், புள்ளியியல், பொறியியல் அல்லது முதுகலை பட்டப்படிப்பு/டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
முதலீட்டாளர் சேவை செல் & கணக்கு துறை: ICSI/ICAI/MBA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: மேனேஜர் பதவிக்கு ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படுகிறது. சீனியர் மேனேஜர் பதவிக்கு ரூ.85,920 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படும். தலைமை மேனேஜர் பதவிக்கு ரூ.1,02,300 முதல் ரூ.1,20,940 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் தகுதிக்கேற்ப எழுத்துத் தேர்வு + நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு விவரம்:
எழுத்துத்தேர்வு ஆங்கிலம், பணிக்கான அறிவு, பகுத்தறிவு, நுண்ணறிவு ஆகியவற்றில் 160 கேள்விகளுடன் 220 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் நெகட்டிங் மதிப்பெண்கள் உள்ளன. கட்-ஆஃப் அடிப்படையில் இதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்புவர்கள் https://indianbank.bank.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி: அக்டோபர் 13-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
Read more: “தப்பி ஓடிய கொலைக் குற்றவாளி விஜய்யை கைது செய்..” சென்னை, கரூரில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு..