தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில், ஒன்றிய அளவில் ஈப்பு ஓட்டுநர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு மொத்தம் 385 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வயது வரம்பு:
அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர்
- குறைந்தபட்சம்: 18 வயது
- பொதுப் பிரிவு: 32 வயது
- பிசி / எம்பிசி: 34 வயது
- எஸ்சி / எஸ்டி: 37 வயது
ஈப்பு ஓட்டுநர்
- குறைந்தபட்சம்: 18 வயது
- பொதுப் பிரிவு: 32 வயது
- பிசி / எம்பிசி: 34 வயது
- எஸ்சி / எஸ்டி: 42 வயது
கல்வித்தகுதி:
* அலுவலக உதவியாளர் பதவிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
* பதிவறை எழுத்தர் பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* இரவு காவலர் பதவிக்கு தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும்.
* ஈப்பு காவலர் பதவிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகளுக்கு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேவையான ஆவணங்கள்:
- விண்ணப்பதாரின் புகைப்படம்
- விண்ணப்பதாரின் கையொப்பம்
- வகுப்பு சான்றிதழ்
- குடும்ப அட்டை
- அனுபவம் சான்றிதழின் நகல்
- ஓட்டுநர் உரிமம் (தேவையிருப்பின்)
- கல்வித்தகுதி சான்றிதழ்
- விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 வங்கி கணக்கில் வைத்துகொள்ளவும். ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் ரூ.50 செலுத்தினால் போதும்.
எப்படி விண்ணப்பிப்பது? தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 385 காலிப்பணியிடங்களுக்கு www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் படிகள்:
* அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
* முகப்புப் பக்கத்தில் உள்ள காலிப்பணியிட அறிவிப்பைப் பார்த்து, தகுதி விவரங்களை கவனமாக படிக்கவும்.
* தகுதியுள்ளவர்கள் “Apply” (விண்ணப்பிக்க) என்பதை கிளிக் செய்யவும்.
* உங்கள் பெயர், தந்தை/பாதுகாவலர் பெயர், பிறந்த தேதி, கல்வித்தகுதி, மாவட்டம், முகவரி, மொபைல் எண், இமெயில் போன்ற விவரங்களை சரியாக நிரப்பவும்.
* தேவையான சான்றிதழ்கள்/ஆவணங்களை (படங்களுடன்) பதிவேற்றம் செய்யவும்.
* Captcha நிரப்பி, OTP மூலம் உங்கள் மொபைல் எண்ணை சரிபார்க்கவும்.
* விவரங்கள் சரியாக உள்ளதா எனச் சரிபார்த்து, கட்டணம் செலுத்தும் பகுதிக்கு செல்லவும்.
* கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, யுபிஐ, நெட் பேங்கிங் மூலம் விண்ணப்பக் கட்டணம் செலுத்தலாம்.
* கட்டணம் வெற்றிகரமாக செலுத்திய பிறகு, விண்ணப்பப் படிவம் மற்றும் ரசீதை பதிவிறக்கம் செய்து பாதுகாத்துக்கொள்ளவும்.
கடைசி தேதி: ஆர்வமுள்ளவர்கள் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பத்தில் தவறான தகவல் அளிக்கக்கூடாது. போலி சான்றிதழ் அல்லது தகவல் கண்டறியப்பட்டால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.




