தமிழக அரசு போக்குவரத்துத் துறையின் கீழ் செயல்படும் அரசுப் பேருந்துகளுக்காக ஓட்டுநர் மற்றும் உடன் நடத்துநர் பணியிடங்களை நிரப்பும் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 21 வயது நிரம்பிய ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை: பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் www.arasubus.onlinereg.in என்ற இணையதளத்தில் சென்று தங்கள் தகவல்களை பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஓட்டுநர் மற்றும் நடத்துநராக பணிபுரிவதற்கான உரிய அனுமதிப் படிவங்களும், தகுதிப் பத்திரங்களும் விண்ணப்பிக்கும் நேரத்தில் வைத்திருக்க வேண்டும். மேலும் விரிவான தகவல்களையும் அறிவிப்புகளையும் www.arasubus.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
கடைசி தேதி: விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை வரும் 27 ஜூலை 2025 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கடைசி தேதி கடந்தவுடன் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது. அரசு வேலை தேடுபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Read more: விஜய்யுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை..? உண்மையை போட்டு உடைத்த EPS..!!