சென்னை Amazon நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா..? உடனே அப்ளை பண்னுங்க..!!

Amazon 2025

பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் உலகின் முன்னணி நிறுவனமான அமேசானில், சென்னையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு டிகிரி முடித்த தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், தேர்வாகும் நபர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு ஆன்லைன் வர்த்தகம், கிளவுட் கம்ப்யூட்டிங், டிஜிட்டல் ஸ்ட்ரீமிங், செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட பல துறைகளில் அமேசான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தற்போது, சென்னையின் பெருங்குடி பகுதியில் செயல்பட்டு வரும் அமேசான் நிறுவனத்தில், டிவைஸ் அசோசியேட் (Device Associate), குவாலிட்டி சர்வீசஸ் (Quality Services), டிவைஸ் டெக் சப்போர்ட் (Device Tech Support) போன்ற பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை (டிகிரி) முடித்திருக்க வேண்டும். மேலும், தர உறுதி (QA) முறைகள் மற்றும் கருவிகள் (Methodology and Tools) பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். மென்பொருள் சோதனை (Software Testing) அனுபவம் மற்றும் அது தொடர்பான சான்றிதழ் படிப்பு முடித்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் தெரிந்திருப்பதுடன், சோதனை அறிவு (Testing Knowledge), பகுப்பாய்வுத் திறன் (Analytical Skills) ஆகியவையும் அவசியம்.

இந்தப் பணியிடங்களுக்கு ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். தற்போதைய அறிவிப்பில் மாதச் சம்பளம் குறித்து நேரடியாக குறிப்பிடப்படவில்லை என்றாலும், விண்ணப்பதாரரின் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. எனவே, ஆர்வமும் தகுதியும் உள்ள பட்டதாரிகள், அமேசான் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு https://amazon.jobs/en/jobs/3105294/device-associate-quality-services-device-tech-support?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்ற லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

Read More : அதிகாலையிலேயே அதிர்ச்சி..!! அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்..!! அப்பளம் போல் நொறுங்கிய கார்..!! 4 பேர் துடிதுடித்து பலி..!! ஓசூரில் சோகம்..!!

CHELLA

Next Post

உஷார்!. தினமும் காலை உணவாக கார்ன் ஃப்ளேக்ஸ் சாப்பிடுகிறீர்களா?. எவ்வளவு ஆபத்து தெரியுமா?.

Sun Oct 12 , 2025
இன்றைய காலத்தில் இளைஞர்களின் பிரதான காலை உணவாக தலை தூக்கி வரும் கார்ன் ஃப்ளேக்ஸ்(corn flakes)-னை தினம் சாப்பிடுவது நல்லதா?. இதை தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் என்ன என்பது பற்றி இங்கு தெரிந்துகொள்வோம். கார்ன் ஃப்ளேக்ஸில் போதுமான அளவு மாவுச்சத்து உள்ளது. இந்த போதுமான அளவு மாவுச்சத்து தசைகளின் தளர்வுக்கு வழிவகுத்து உடல் சோம்பலுக்கு காரணமாகிறது. அந்த வகையில் இந்த கார்ன் ஃப்ளேக்ஸ் காலை உணவுக்கு ஏற்ற உணவு […]
corn flakes

You May Like