திருவள்ளூர் மாவட்டத்தில் சமூக நலத்துறையில் பெண்களுக்கான வேலைவாய்ப்பிற்கு அறிவிப்பு வெளியாகி, விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளது. என்னென்ன பதவிகள், தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
திருவள்ளூர் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் குடும்பத்திலினால், சமூதாயத்தினால் அல்லது பணிபுரியும் இடத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்படுகிறது. திருத்தணி மற்றும் திருவள்ளுர் பகுதிகளில் இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பணிபுரிய ஒப்பந்த முறையில் பெண்கள் கொண்டு நிரப்பப்பட உள்ளனர்.
பணியின் விவரங்கள்:
மூத்த ஆலோசகர் (Senior Counsellor) – 1
வழக்கு பணியாளர் (Case Worker) – 9
பல்நோக்கு உதவியாளர் (Multipurpose Worker) – 2
மொத்தம் – 12
வயது வரம்பு: இப்பணியிடங்களுக்கு விண்ணபிக்கும் நபர்கள் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
* மூத்த ஆலோசகர் பதவிக்கு சட்டத்தில் முதுகலை பட்டப்படிப்பு அல்லது சமூகப்பணி/ சமூகவியல்/ சமூக அறிவியல்/ உளவியல் போன்றவற்றில் முதுகலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் அரசு அல்லது அரசு சாரா நிர்வாக அமைப்பில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் கொண்டவரா இருக்க வேண்டும். மேலு, ஆலோசனை வழங்குதலில் 1 வருட அனுபவம் தேவை.
* வழக்கு பணியாளர் பதவிக்கு சமூகப்பணி, சமூகவியல், சமூக அறிவியல் அல்லது உளவியல் பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டம் அல்லது சட்டப்படிப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
* பல்நோக்கு உதவியாளர் பதவிக்கு எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் சமைக்க தெரிந்திருக்க வேண்டும்.
* இப்பணியிடங்களுக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
சம்பள விவரம்:
- மூத்த ஆலோசகர் பதவிக்கு மாதம் ரூ.22,000 சம்பளம் வழங்கப்படும்.
- வழக்கு பணியாளர் பதவிக்கு மாதம் ரூ.18,000 சம்பளம் வழங்கப்படும்.
- பல்நோக்கு உதவியாளர் பதவிக்கு மாதம் ரூ.10,000 சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: திருவள்ளூர் மாவட்டத்தில் சமூக நலத்துறையில் பெண்களுக்கான பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது. ஆதலால் இப்பணியிடங்கள் நேர்காணல் அடிப்படையில் நிரப்பப்படும் என கருதப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமாக உள்ள பெண்கள் https://tiruvallur.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, விண்ணபிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள் – 18.08.2025