8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மாநில தேர்தல் ஆணையத்தில் வேலை.. ரூ. 50 ஆயிரம் சம்பளம்..!

job 7

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் (TNSEC) அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.50,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பணியிட விவரம்:

அலுவலக உதவியாளர் – 7

ஊர்தி ஓட்டுநர் – 2

வயது வரம்பு:

  • பொதுப்பிரிவினர்: 18 – 32 வயது
  • பிற்படுத்தப்பட்டோர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC): 18 – 34 வயது
  • ஆதிதிராவிடர் / பழங்குடியினர் (SC / ST): 18 – 37 வயது
  • ஆதரவற்ற கைம்பெண்கள்: 18 – 37 வயது

வயது தளர்வுகள்

  • மாற்றுத்திறனாளிகள்: மேற்கண்ட வயது வரம்பிற்கு 10 ஆண்டுகள் கூடுதல் தளர்வு
  • முன்னாள் ராணுவத்தினர்: 55 வயது வரை விண்ணப்பிக்க அனுமதி

கல்வித்தகுதி:

அலுவலக உதவியாளர்

  • 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்
  • Xerox மற்றும் Printer இயந்திரங்களை இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்

ஊர்தி ஓட்டுநர்

  • 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மோட்டார் வாகனங்கள் சட்டம் – 1988ன் படி, உரிய அதிகாரம் பெற்ற அலுவலரால் வழங்கப்பட்ட இலகுரக வாகனங்களுக்கு (LMV) செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் அவசியம்
  • Auto Mechanism with First Aid தொடர்பான அனுபவச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் நிரப்பப்படும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பதார்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு அதனடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது? இந்த பணியிடங்களுக்கு ஆர்வமும், உரிய தகுதியும் உள்ளவர்கள், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnsec.tn.gov.in/ என்ற முகவரியில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பின்னர், விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும். கல்வித் தகுதி, வகுப்பு பிரிவு, முன்னுரிமை கோரும் சான்றிதழ்கள், அடையாள அட்டை நகல்கள் ஆகியவற்றை சுய சான்றொப்பமிட்டு விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

முகவரி: தலைமை நிர்வாக அலுவலர்,
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்,
எண்.208/2, ஜவஹர்லால் நேரு சாலை,
அரும்பாக்கம், சென்னை – 600 106.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.01.2026 மாலை 5 மணி வரை

Read more: 6,100 கிலோ செயற்கைக்கோள்.. வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பாகுபலி ராக்கெட்..! இஸ்ரோ சாதனை..!

English Summary

Jobs in Tamil Nadu State Election Commission for 8th graders.. Rs. 50 thousand salary..!

Next Post

65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 150/80 என்ற ரத்த அழுத்தம் இருப்பது ஆபத்தானதா..? மருத்துவர்கள் என்ன சொல்கின்றனர்..?

Wed Dec 24 , 2025
Is a blood pressure reading of 150/80 dangerous for people over 65 years of age?
high blood pressure

You May Like