தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா மற்றும் ஆலியா பட் போன்ற முன்னணி நடிகைகள் பாலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.. ஆனால் இவர்களில் யாரும் இந்தியாவின் பணக்கார நடிகை இல்லை.. ஹுருன் ரிச் லிஸ்ட் 2024 இன் படி, இந்தியாவின் பணக்கார பெண் நடிகையாக ஜூஹி சாவ்லா முதலிடத்தில் உள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளில் பெரிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், ஜூஹி ரூ. 4,600 கோடி சொத்து மதிப்பை குவித்துள்ளார்.. இதன் மூலம் நாட்டின் பணக்கார நடிகையாக மாறி உள்ளார்..
1984 இல் மிஸ் இந்தியா பட்டம் வாங்கிய ஜூஹி சாவ்லா, தனது 19 வயதிலேயே பாலிவுட்டில் அறிமுகமானார்.. சுல்தானாத் (1986) திரைப்படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார்.. பின்னர் கயாமத் சே கயாமத் தக் (1988) படம் ஆமிர் கானுடன் ஜோடி சேர்ந்தார்.. இந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற நிலையில் பிரபலமான நடிகையாக மாறி..
பிலிம்பேர் சிறந்த அறிமுக விருதைப் பெற்றார். ஹம் ஹைன் ரஹி பியார் கே, யெஸ் பாஸ், டார், இஷ்க், போல் ராதா போல் மற்றும் ஃபிர் பி தில் ஹை ஹிந்துஸ்தானி போன்ற வெற்றிகளுடன் 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். சமீபத்திய ஆண்டுகளில் ஜூஹி சாவ்லா படங்களில் நடிப்பது அரிதாகிவிட்டாலும், பாலிவுட் நட்சத்திரமாக ஜூஹியின் மரபு இன்னும் வலுவாகவே உள்ளது.
ஷாருக் கான் மற்றும் கணவர் ஜெய் மேத்தாவுடன் இணைந்து உரிமையாளராக இருக்கும் ஐபிஎல் உரிமையாளரான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியில் ஜூஹி பெற்ற பங்குகளே அவரின் வணிக வளர்ச்சிக்கு முக்கிய காரணம். இந்த அணி முதலில் 75 மில்லியன் டாலர்களுக்கு (₹623 கோடி) வாங்கப்பட்டது, இப்போது ஃபோர்ப்ஸ் படி, அதன் மதிப்பு வியக்கத்தக்க வகையில் 1.1 பில்லியன் டாலர்கள் (₹9,139 கோடி) ஆகும். ரெட் சில்லிஸ் குழுமத்தின் இணை நிறுவனராகவும் ஜூஹி சாவ்லா இருக்கிறார்.. தனது கணவரின் மேத்தா குழுமத்தின் ஒரு பகுதியான சவுராஷ்டிரா சிமென்ட் லிமிடெட்டில் 0.07% பங்குகளை அவர் வைத்திருக்கிறார், இது அவரது நிதி இலாகாவிற்கு மற்றொரு பங்கை சேர்க்கிறது.
திரைப்படங்கள் மற்றும் கிரிக்கெட்டுக்கு அப்பால், ஜூஹியின் செல்வம் அவரது விரிவான ரியல் எஸ்டேட் சொத்துக்கள் மற்றும் சொந்த ஹோட்டல் ஆகியவற்றில் பிரதிபலிக்கிறது. ஜூஹி சாவ்லாவின் குடும்பம் மும்பையின் மிகவும் உயரடுக்கு பகுதியான மலபார் ஹில்லில் ஒரு ஆடம்பரமான பல மாடி வீட்டில் வசித்து வருகிறது..
குஜராத்தின் போர்பந்தரில் அவர்களுக்கு ஒரு மூதாதையர் பங்களாவும் உள்ளது. மும்பையில் ஜூஹி மற்றும் ஜெய் மேத்தா இரண்டு உயர்ரக உணவகங்களை (கஸ்டோசோ – இத்தாலியன் மற்றும் ரூ டு லிபன் – லெபனான்) வைத்துள்ளனர்.. மேலும் பல ஆடம்பர கார்களையும் ஜூஹி சாவ்லா வைத்திருக்கிறார்.. ரூ.3.3 கோடி மதிப்புள்ள ஆஸ்டன் மார்டின் ரேபிட், BMW 7-சீரிஸ், மெர்சிடிஸ் பென்ஸ் S-கிளாஸ், ஜாகுவார் XJ மற்றும் போர்ஷே கயென் போன்ற பல கார்கள் அவரின் கார் சேகரிப்பில் அடங்கும், இவை அனைத்தும் ஒரு ஸ்டைலான வாழ்க்கையைக் குறிக்கின்றன.
விளம்பரங்கள் மூலம் ஜூஹி சாவ்லா கணிசமான வருவாய் ஈட்டுகிறார்.. மேகி, பெப்சி, கெல்லாக்ஸ், குர்குரே, ரூஹ் அஃப்சா, போரோப்ளஸ் மற்றும் கேஷ் கிங் ஆயுர்வேதிக் ஆயில் போன்ற முக்கிய பிராண்டுகளில் அவர் நடித்து வருகிறார்.. திரைப்படங்களில் நடிப்பது குறைந்தாலும் தற்போதும் பிரபலமான முகமாகவே வலம் வருகிறார்.. குறிப்பாக இன்ஸ்டாகிராமில் 2.2 மில்லியன் ஃபாலோயர்கள் அவருக்கு உள்ளனர்.. தனது அழகு, ஈர்ப்பு மற்றும் புத்திசாலித்தனமான முதலீடுகள் மூலம் நாட்டின் பணக்கார நடிகையாக ஜூஹி சாவ்லா வலம் வருகிறார்..
Read More : ரஜினி பட நடிகையின் உறவினர் கொலை.. பார்க்கிங் தகராறில் ஏற்பட்ட சோகம்.. அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்..