வியாழன் கோள் சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கோள் ஆகும். 60 ஆண்டுகளுக்கு பின் இந்த அரிய நிகழ்வானது நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மேற்கில் சூரியன் அஸ்தமிக்கும் போது கீழ் திசையில் வியாழன் எழுகிறது. அவ்வாறு எதிர் எதிர் திசையில் இது நிகழும் போது பூமிக்கு நெருக்கமாக வரும் வியாழன் கோள் வானில் தோன்றும்.
நாசா விஞ்ஞானி கூற்று படி, வியாழன் கோள் பூமியில் இருந்து 367 மில்லியன் மைல்கள் தொலைவில் இருக்கும் இந்த கோள் நாளை பூமிக்கு அருகே வர இருக்கிறது. நாளை இரவு முழுவதும் வாயு ராட்சதத்தின் கண்கவர் காட்சிகள் கிடைக்கும். வியாழனின் கோள் ஒவ்வொரு 13 மாதங்களுக்கும் ஏற்படுகிறது, இதனால் கிரகம் ஆண்டின் மற்ற நேரத்தை விட பெரியதாகவும் பிரகாசமாகவும் தோன்றும்.
இதற்கு முன்னர் 1963 ஆம் ஆண்டு இது போன்ற நிகழ்வு நடந்துள்ளது. தற்போது 60 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இந்த அற்புதமான சம்பவம் நிகழ இருக்கிறது. இந்த அரிய நிகழ்வை பைனாகுலர் மூலமாக பார்க்கலாம். வியாழன் கோளின் 4 சந்திரன்களை நீங்கள் பார்க்க முடியும் என்று நாசா விஞ்ஞானி ஆடம் கோபெல்ஸ்கி கூறியுள்ளார்.