தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் தங்களது உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். உணவு பழக்கம் முதல் உடற்பயிற்சி, யோகா, தியானம் வரை என அனைவரும் ஈடுபாடுடன் செய்து வருகின்றனர். அதேபோல், அதிகப் பலன் தரக்கூடிய உடற்பயிற்சியை நீங்கள் தேடிக் கொண்டிருப்பவர் என்றால், உங்களுக்கு ஸ்கிப்பிங் (Skipping) சரியான தேர்வாக இருக்கும்.
தினமும் வெறும் 15 நிமிடங்கள் ஸ்கிப்பிங் செய்வதன் மூலம் 300 கலோரிகளை எரிக்க முடியும். இது ஒரு பயனுள்ள உடற்பயிற்சி மட்டுமல்ல, எந்த நேரத்திலும், எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் :
* ஸ்கிப்பிங் இதயத் துடிப்பை அதிகரித்து, ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதனால் இதய தசைகள் வலுவடைந்து இதய நோய் வருவதற்கான அபாயமும் குறைகிறது.
* ஸ்கிப்பிங், உடலின் ஒவ்வொரு பகுதியையும் செயல்படுத்துவதால், மிக குறைந்த நேரத்தில் அதிக கலோரிகளை எரித்து, தேவையற்ற கொழுப்பை குறைக்கிறது.
* ஸ்கிப்பிங் செய்வதால் உங்களைச் சுறுசுறுப்பாகவும், ஆற்றலுடனும் இருக்க செய்யும்.
* ஸ்கிப்பிங் செய்வது எலும்புகளின் அடர்த்தியை அதிகரித்து, அவற்றை வலுப்படுத்துகிறது. இதனால் எலும்புப்புரை (Osteoporosis) போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.
* உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு ஸ்கிப்பிங் ஒரு சிறந்த தேர்வாகும். இது ஒரு தீவிரமான உடற்பயிற்சி என்பதால், வேகமாக வியர்வையை உண்டாக்கி, உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவும்.
Read More : “பூஜா ஹெக்டேவை விட செமயா இருக்கே”..!! கல்லூரி மாணவர்களுடன் மோனிகா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பேராசிரியை..!!



