இன்றைய காலத்தில் மொபைல் போன் ரீசார்ஜ் செலவு, ஒவ்வொரு குடும்பத்தின் மாதாந்திர செலவு பட்டியலில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்வது சிலருக்கு சிரமமாக உள்ள நிலையில், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்காக ஒரு வருடம் செல்லுபடியாகும் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி நீங்கள் ரூ. 1849 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால், ஆண்டு முழுவதும் (365 நாட்கள்) சிம்மை செயலில் வைத்திருக்க முடியும். மிகக் குறைந்த விலையில் பல சேவைகளையும் நீங்கள் பெறலாம். இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களைக் கவர ஒரு வருட திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. ஒரு நாளைக்கு வெறும் 5 ரூபாய்க்கு உங்கள் சிம்மை ஒரு வருடம் முழுவதும் செயலில் வைத்திருக்கலாம். இணைய டேட்டா தேவையில்லை… இந்த ரீசார்ஜ் திட்டம் வெறும் பேச்சு நேரத்தை விரும்புவோருக்கு ஏற்றது.
TRAI-யின் அறிவுறுத்தல்களின்படி, ஏர்டெல் இந்த ரூ.1849 ரீசார்ஜ் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. குறைந்த டேட்டாவைப் பயன்படுத்துபவர்களுக்கும், ஒரு வருடத்திற்கு ரீசார்ஜ் செய்வது பற்றி கவலைப்பட விரும்பாதவர்களுக்கும் இது மிகவும் நல்லது. ஏர்டெல்லில் மிகவும் மலிவான வருடாந்திர திட்டம் இது. 365 நாட்கள் செல்லுபடியாகும், வரம்பற்ற அழைப்புகள், 3600 SMS, இலவச ஹலோ ட்யூன்கள் கிடைக்கின்றன. இந்தத் திட்டத்தில் டேட்டா இல்லை. தேவைப்பட்டால், நீங்கள் ஒரு டேட்டா பேக்கைச் சேர்க்கலாம்.
இந்திய தொலைத்தொடர்பு சந்தை வளர்ந்து வருவதாக TRAI தெரிவித்துள்ளது. நாட்டில் மொத்த தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை 123.1 கோடியை எட்டியுள்ளது. இவர்களில் 118.4 கோடி பேர் மொபைல் பயனர்கள். அவர்களில் பலர் இணையத்தை அதிகம் பயன்படுத்துவதில்லை. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அத்தகையவர்களுக்காக ரீசார்ஜ் திட்டங்களைக் கொண்டு வருகின்றன. ஏர்டெல்லின் ரூ.1849 ரீசார்ஜ் திட்டம் இதன் ஒரு பகுதியாகும்.
Read more: இனி ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் Whatsapp Web லாக் அவுட்ஆகிவிடும்.. மத்திய அரசின் புதிய விதி..!



