இனி சில நிமிடங்கள் போதும்.. டிரைவிங் லைசன்ஸில் ஃபோன் நம்பரை ஈசியா மாற்றலாம்..!! வழிமுறைகள் இதோ..!!

Driving Licence 2025

நவீன தொழில்நுட்ப உலகில், நமது செல்போன் எண் என்பது அரசு சேவைகளை பெற முக்கிய அடையாளமாக மாறிவிட்டது. குறிப்பாக ஓட்டுநர் உரிமம் தொடர்பான அனைத்து தகவல்களும், புதுப்பித்தல்களும், விதிகளும் நமது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்குத்தான் நேரடியாக அனுப்பப்படுகின்றன. எனவே, நமது மொபைல் எண் மாறும்போது, அதை ஓட்டுநர் உரிமத்தில் புதுப்பிக்க வேண்டும்.



இந்நிலையில், தற்போதைய டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், அரசின் பல சேவைகள் இப்போது ஆன்லைனில் கிடைக்கின்றன. ஓட்டுநர் உரிமத்தில் மொபைல் எண்ணை மாற்றுவதும் எளிமையான ஆன்லைன் நடைமுறையாக உள்ளது. முதலில், சம்பந்தப்பட்ட மாநில போக்குவரத்துத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு, ஓட்டுநர் உரிமம் (Driving Licence) பிரிவில், மொபைல் எண் புதுப்பித்தல் (Mobile Number Update) என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அடுத்து, உங்களது ஓட்டுநர் உரிம எண், பிறந்த தேதி போன்ற விவரங்களை உள்ளிட்டு, கணினியின் வழிகாட்டுதலின்படி proceed என்ற பொத்தானை அழுத்த வேண்டும். அடுத்த கட்டமாக, புதிய மொபைல் எண்ணைப் பதிவு செய்து, ஏன் இந்த மாற்றம் தேவைப்படுகிறது என்பதற்கான காரணத்தையும் குறிப்பிட வேண்டும்.

புதிய எண்ணைப் பதிவு செய்தவுடன், அந்த எண்ணுக்கு OTP வரும். அந்த OTP-ஐ உள்ளிட்டு சரிபார்த்தவுடன், உங்களது மொபைல் எண் வெற்றிகரமாகப் புதுப்பிக்கப்பட்டுவிடும். பொதுவாக இந்த நடைமுறை எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக இருந்தாலும், சில மாநிலங்களில் கூடுதல் பாதுகாப்புக்காக ஆதார் அங்கீகாரம் கேட்கப்படலாம்.

சில அரிதான சமயங்களில், ஆன்லைன் முறையில் சிக்கல்கள் ஏற்பட்டால், நீங்கள் நேரடியாக ஆர்டிஓ அலுவலகத்திற்கு சென்று புதுப்பித்துக் கொள்ளலாம். இந்த ஆன்லைன் வசதி, பொதுமக்கள் சிரமமின்றி தங்கள் மொபைல் எண்ணை புதுப்பித்துக் கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. எனவே, உங்கள் மொபைல் எண்ணை மாற்றும்போதெல்லாம், உடனடியாக உங்கள் டிரைவிங் லைசன்ஸ் உரிமத்திலும் அதை புதுப்பித்து, அரசின் முக்கியமான தகவல்களை தவறவிடாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்.

Read More : செல்வ மகள் சேமிப்புத் திட்டம்..!! வந்தாச்சு லேட்டஸ்ட் அப்டேட்..!! லட்சங்களில் வருமானம் கொட்டும்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

CHELLA

Next Post

தமிழில் 100 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும்...! அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு...!

Sun Sep 21 , 2025
பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார். பள்ளிக் கல்வித்துறை சார்பாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் ஆசிரியர் […]
Anbil Mahesh School Mask 2025

You May Like