மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நடைபெற்ற 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், வரி விதிப்பு முறையில் புதிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 4 மடங்காக இருந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு தற்போது இரண்டு மடங்காக குறைக்கப்பட்டு, 353 பொருட்களின் விலை குறைய வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பால், பல முக்கியப் பொருட்களின் விலை குறைய உள்ளது.
தொலைக்காட்சிகள் : 32 இன்ச்க்கு மேல் உள்ள தொலைக்காட்சிகளுக்கான ஜிஎஸ்டி வரி 28% இலிருந்து 18% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், தொலைக்காட்சிகளின் விலை ரூ.2,000 முதல் ரூ.23,000 வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏசி : ஏசிகளுக்கான விலை ரூ.3,500 முதல் ரூ.4,500 வரை குறைய வாய்ப்புள்ளது.
சிறிய ரக கார்கள் : 4 மீட்டருக்குள் நீளமும் 1200 சிசி-க்கு குறைவான திறன் கொண்ட கார்களுக்கான ஜிஎஸ்டி வரி 28% இலிருந்து 18% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ரூ.5 லட்சம் மதிப்புள்ள கார்களின் விலை ரூ.62,500 வரை குறைய வாய்ப்புள்ளது.
சில பொருட்களின் விலை அதிகரிப்பு :
நல்ல செய்தி ஒருபுறம் இருக்க, சில பொருட்களின் விலை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. 5% மற்றும் 18% ஜிஎஸ்டி, 40% சிறப்பு வரிவிதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஐபிஎல் டிக்கெட்டுகள் உட்பட 38 பொருட்களின் விலை உயர உள்ளது. குறிப்பாக, ஐபிஎல் டிக்கெட்டுகளுக்கான ஜிஎஸ்டி வரி 28% இலிருந்து 40% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ரூ.1,000 மதிப்புள்ள டிக்கெட்டுக்கு இனி ரூ.1,400 செலுத்த வேண்டியிருக்கும்.
Read More : ரூ.1 லட்சம் வழங்கும் தமிழ்நாடு அரசு..!! யாருக்கெல்லாம் கிடைக்கும்..? விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்..!!