மத்தியப் பிரதேசத்தின் பரபரப்பான நகரான போபாலில், ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் நடந்த கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரோஷினி என்ற இளம்பெண் தனது காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணையில் வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
ரோஷினிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த டெய்லர் முபின் கானுக்கும் நட்பு ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. இருவரும் ரகசியமாகச் சந்தித்து, தங்கள் காதலை வளர்த்துள்ளனர். ரோஷினியின் தாய்க்கு இந்த விவகாரம் தெரியவந்தபோது, அவர் தனது மகளுக்கு உடனடியாக திருமணம் செய்ய முடிவு செய்தார். ரோஷினி தாயின் முடிவுக்கு இணங்கி, முபினுடனான உறவைத் துண்டித்துக் கொண்டார்.
இதையடுத்து, ரோஷினிக்கு ஒரு பொறியாளருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, நிச்சயதார்த்தமும் முடிந்தது. இதனால் மனமுடைந்த முபின், ரோஷினியிடம் கடைசி முறையாக சந்திக்க கேட்டுள்ளார். அவரது சோகமான பேச்சால் மனம் இறங்கிய ரோஷினி, அவனை தனது அறைக்கு அனுமதித்தார்.
கடைசி சந்திப்பு என இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, அவர்களின் உரையாடல் வாக்குவாதமாக மாறியது. “ஏன் என்னுடன் பேசாமல் விட்டுவிட்டாய்?” என்று கேட்ட முபின், ஆத்திரமடைந்து தான் மறைத்து கொண்டு வந்த கத்தியால் ரோஷினியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். பின்னர், ரோஷினி தற்கொலை செய்து கொண்டதுபோல, அவர் கழுத்தில் ஒரு பிளேடை வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
காவல்துறையின் விசாரணையில், கழுத்து ஆழமாக அறுக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. ஒரு பிளேடால் இவ்வளவு ஆழமான வெட்டை ஏற்படுத்த முடியாது என்பதை உணர்ந்த போலீசார், இது தற்கொலை அல்ல, கொலை என்பதை உறுதி செய்தனர். பின்னர், நடத்திய தீவிர விசாரணையில், முபின் கானை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Read More : திடீரென 37 கிலோ உடல் எடையை குறைத்த இளைஞர்..!! எப்படி சாத்தியம்..? பின்பற்றிய பழக்கங்கள் என்ன..?



