உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை சேமிப்பது, எதிர்கால நிதி பாதுகாப்புக்கு அடிப்படை ஆகும். அவசர காலத் தேவைகள், கல்வி, ஓய்வு வாழ்க்கை போன்றவற்றுக்காக சேமிப்பு அவசியம். அந்த வகையில், பொதுமக்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்ய பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம் சிறந்த தேர்வாக உள்ளது.
இந்த திட்டத்தை இந்திய தபால் அலுவலகம் நடத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, PPF திட்டத்திற்கு 7.1 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இது தபால் அலுவலகத்தின் உயர்ந்த வட்டி விகிதம் கொண்ட திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. PPF திட்டத்தில், ஒவ்வொரு மாதமும் ரூ.1,500 முதலீடு செய்தால், 15 ஆண்டுகள் முடிவில் சுமார் ரூ.5 லட்சம் வரை தொகை கிடைக்கும்.
ஆண்டு முதலீடு: ரூ.18,000
15 ஆண்டுகளில் மொத்த முதலீடு: ரூ.2,70,000
7.1% வட்டி விகிதத்தில் கிடைக்கும் மொத்த வட்டி: ரூ.2,18,185
15 ஆண்டுகள் முடிவில் பெறும் தொகை: ரூ.4,88,185
அதிக வருமானம் பெற விரும்பினால், முதிர்ச்சி காலமான 15 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தக் கணக்கை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும் வாய்ப்பு உள்ளது.
முதலீட்டு விதிமுறைகள்
குறைந்தபட்ச ஆண்டு முதலீடு: ரூ.500
அதிகபட்ச ஆண்டு முதலீடு: ரூ.1.5 லட்சம்
முதிர்வு காலம்: 15 ஆண்டுகள்
நீட்டிப்பு: 5 ஆண்டுகள் (தேவைக்கேற்ப)
கணக்கு தொடங்குவது எப்படி? PPF கணக்கைத் தொடங்க, அருகிலுள்ள தபால் நிலையத்திற்குச் சென்று குறைந்தபட்சம் ரூ.500 வைப்பு தொகையுடன் கணக்கு திறக்கலாம். இந்தத் திட்டம் பாதுகாப்பான முதலீடு மட்டுமல்லாமல், வரிச் சலுகைகளையும் வழங்குகிறது.
Read more: 4 குழந்தைகளுக்கு HIV தொற்று உறுதி; மருத்துவர் இடைநீக்கம்; மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்..!



