இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் பணத்தை சேமிக்க அல்லது எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய நம்பகமான வழிகளைத் தேடுகின்றனர். அந்த வகையில், இந்திய அரசு வழங்கும் மிகவும் நம்பகமான திட்டங்களில் ஒன்று பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund – PPF) ஆகும். இது தபால் நிலையம் அல்லது சில வங்கிகள் மூலம் திறக்கக்கூடிய, அரசாங்கம் உறுதி அளிக்கும் ஒரு பாதுகாப்பான சேமிப்பு திட்டம் ஆகும்.
இந்த திட்டம் அரசாங்க உத்தரவாதம், வரி விலக்கு மற்றும் நிலையான வட்டி விகிதம் ஆகிய மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டது என்பதாலேயே, சிறு மற்றும் நடுத்தர வர்க்க முதலீட்டாளர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாக கருதப்படுகிறது.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: பொது வருங்கால வைப்பு நிதி என்பது 15 வருட கால அவகாசம் கொண்ட ஒரு நீண்ட கால சேமிப்புத் திட்டமாகும். குறைந்தபட்சம் ரூ. 500 முதல் அதிகபட்சம் ரூ. 1.5 லட்சம் வரை இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். தற்போது, இந்தத் திட்டத்திற்கு ஆண்டு வட்டி விகிதம் 7.1 சதவீதம் உள்ளது. இது முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது முதலீடு, வட்டி அல்லது முதிர்வு மீது வரி இல்லை.
இந்த திட்டத்தில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.20 லட்சம் பெற விரும்பினால் ஒவ்வொரு மாதமும் ரூ.6,250 சேமிக்க வேண்டும். அது வருடத்திற்கு ரூ.75,000, 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.11,25,000 ஆகும். 7.1% வட்டியில் உங்களுக்கு தோராயமாக ரூ.8.9 லட்சம் வட்டி கிடைக்கும். இதனால் 15 ஆண்டுகள் முடிவில் மொத்தம் ரூ.20.15 லட்சம் பெறுவீர்கள்.
மேலும் கணக்கு தொடங்கிய இரண்டாம் வருடத்திற்குப் பிறகு கடன் பெறலாம். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, தேவைப்பட்டால் ஒரு குறிப்பிட்ட தொகையை திரும்பப் பெறலாம். அரசு உத்தரவாதம் அளிக்கும் திட்டம் என்பதால், எந்த ஆபத்தும் இல்லை.
Read more: விக்கி கௌஷல் – கத்ரீனா ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்தது.. குவியும் வாழ்த்துகள்..



