இந்திய தபால் துறையின் சேமிப்பு திட்டங்கள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. பாதுகாப்பான முதலீடு, வரிச்சலுகை, வட்டி வருவாய், கடன் வசதி என பல அம்சங்கள் இருப்பதால், மக்கள் தபால் நிலைய திட்டங்களில் ஈடுபடுகின்றனர். அவற்றில் மிகவும் பிரபலமானது பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டமாகும்.
இந்த திட்டத்தில் வருடத்திற்கு குறைந்தபட்சம் ரூ.500 முதலீடு செய்தால் போதும். அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்ய அனுமதி உண்டு. 15 ஆண்டுகள் கால அவகாசம் கொண்ட இந்த திட்டத்தில் நீண்டகால சேமிப்பாளர்கள் அதிக லாபத்தை பெற முடியும். தற்போது பிபிஎஃப் திட்டத்தில் வருடாந்திர வட்டி விகிதம் 7.1 சதவீதம். மேலும், வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரிச்சலுகை கிடைக்கும்.
சம்பாதித்த வட்டி மற்றும் முதிர்வுத்தொகைக்கு வரிகள் எதுவும் கிடையாது. இதுவே பொதுமக்களிடம் இந்த திட்டத்தை தனித்துவமாக்குகிறது. ஒருவர் மாதம் ரூ.7,500 (அதாவது வருடத்திற்கு ரூ.90,000) முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.13,50,000 ஆகும். இதற்கு வட்டி ரூ.10,90,926 சேர்ந்து, மொத்தம் ரூ.24,40,926 பெற முடியும். சிறிய முதலீட்டில் பெரிய லாபம் கிடைப்பது இதன் சிறப்பு.
இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று கடன் வசதி. முதலீட்டின் 5 ஆண்டுகள் கடந்த பின், சேமிப்பின் 25% வரை கடனாக பெற முடியும். பிபிஎஃப் வட்டி விகிதம் 7.1% என்றால், கடனுக்கான வட்டி வெறும் 8.1% மட்டுமே. இது பாதுகாப்பற்ற கடன்களை விட மிகவும் மலிவானது. 18 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடியுரிமை பெற்றவர்கள் யாரும் இந்த பிபிஎஃப் கணக்கை தொடங்கலாம். தபால் நிலையங்களிலும், எஸ்பிஐ உள்ளிட்ட சில வங்கிகளிலும் இந்த கணக்கைத் திறக்க வசதி உண்டு.
Read more: Flash : என்ன ஆச்சு? காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மருத்துவமனையில் அனுமதி..



