கலைஞர் மகளிர் உரிமைத் தொகை.. உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா..? வெளியான முக்கிய அப்டேட்..

Magalir Urimai Thogai 2 2025 07 9eb7752fe559866f5586af0eeb756baa 1

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். 2023 ஆம் ஆண்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் கோடிக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி ரூ.1000 பணம் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.


கடந்த முறை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக மீண்டும் விண்ணப்பித்து வருகிறார்கள். இந்த முகாம்கள் நவம்பர் 14-ம் தேதி முடிவடைய உள்ள நிலையில், உரிமைத் தொகை கோரி புதிதாக பெறப்பட்ட விண்ணப்பங்களை வருவாய்த் துறையினர் தீவிரமாக களஆய்வு செய்து வருகின்றனர்.

புதிதாக விண்ணப்பித்த பெண்களின் வீட்டிற்கு அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த விஏஓ தலைமையிலான குழு கள ஆய்வுக்கு வரும். அந்த ஆய்வின்போதே உங்களுடைய தகவல்கள் எல்லாம் சரியாக இருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டிருந்தால், அப்போதே உங்களுடைய மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

அதேநேரத்தில் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும் என்றால் குறுஞ்செய்தி உங்களுடைய மொபைல் எண்ணுக்கு வரும். அதேபோல், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்களுக்கும், ஏன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது? என்ற காரணம் தெரியப்படுத்தப்படும். ஒருவேளை நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் சரியானது இல்லை என நினைப்பவர்கள் மேல்முறையீடு செய்யலாம். நவம்பர் இரண்டாவது வாரத்திற்கு பிறகு மேல்முறையீடு செய்வதற்கான அறிவிப்பை அரசு அறிவிக்கும்.

Read more: காரணமின்றி ரயிலில் சங்கிலியை இழுத்தால் என்னென்ன தண்டனைகள் கிடைக்கும் தெரியுமா?

English Summary

Kalaingar Magalir Urimai Thogai.. Has your application been accepted..? Important update released..

Next Post

ரூ.65,000 விலையில் சிறந்த மைலேஜ் பைக்.. ஃபுல் டேங்கில் 700 கி.மீ. தூரம் பயணிக்கலாம்!

Mon Oct 27 , 2025
குறைந்த விலையில் ஒரு பைக்கை வாங்க திட்டமிட்டால், உங்களுக்கு சிறந்த தேர்வு இந்த பைக்காக இருக்கும்.. 100 சிசி பிரிவு இந்திய மோட்டார் சைக்கிள் சந்தையில் மிகவும் பிரபலமானது. ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் நீண்ட காலமாக இந்த பிரிவில் முதலிடத்தில் உள்ளது. இருப்பினும், இது தற்போது டிவிஎஸ் ஸ்போர்ட் போன்ற குறைந்த விலை பைக்குகளிலிருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது. இந்த இரண்டு பைக்குகளும் பட்ஜெட் பயனர்களை ஈர்க்கின்றன. ஜிஎஸ்டி குறைப்புக்குப் […]
hero splendor plus

You May Like