லேடீஸ் காலேஜ்-க்கு பேண்ட் இல்லாமல் வந்த கமல்.. ஒரே அசிங்கமா போச்சு..!! – நடிகை சுஹாசினி ஓபன் டாக்

suhasini kamal

கமல் ஹாசனின் அண்ணன் மகள் சுஹாசினி மணிரத்னம் ஒரு பிரபலமான நடிகை. தன் சித்தப்பா கமல் ஹாசனுடன் சேர்ந்து ஒரு தமிழ் படத்தில் கூட அவர் நடித்தது இல்லை. சித்தப்பா கமலுக்கும், சுஹாசினிக்கும் இடையே 7 ஆண்டுகள் தான் வயது வித்தியாசம்.


சுஹாசினிக்கு 63 வயதாகிறது. கமல் ஹாசனுக்கு 70 வயதாகிறது. வயது வித்தியாசம் குறைவாக இருந்ததால் சித்தப்பா, மகளாக இல்லை அண்ணன், தங்கையாக தான் கமலும், சுஹாசினியும் வளர்ந்திருக்கிறார்கள். அதனால் சுஹாசினி தன்னை சித்தப்பா என்று அழைப்பதை கமல் ஹாசன் விரும்பவில்லை. வயது வித்தியாசம் பெரிதாக இல்லாததால் கமலை பெயர் சொல்லித் தான் அழைத்து வருகிறார் சுஹாசினி. சித்தப்பா முறையான கமல் குறித்து சுஹாசினி முன்னர் அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

அந்த பேட்டியில் சுஹாசினி கூறுகையில், கமல் வீட்டில் கராத்தே பயிற்சி செய்வார். அதற்கென்று ஒரு உடை வைத்திருந்தார். அதற்கு பேண்ட் கிடையாது. அன்டர்பேண்ட்டை மட்டும் போட்டுக்கிட்டு தான் கராத்தே பயிற்சி செய்வார். ஒரு நாள் நான் புது கார் வாங்கியிருக்கிறேன் என்று சொல்லி என்னை கல்லூரியில் டிராப் செய்கிறேன் என்றார். தயவு செய்து பேண்ட் போட்டுட்டு வாங்க இல்லைனா ஒரு ஷார்ட்ஸாவது போடுங்க. இப்படியே கல்லூரிக்கு வராதீங்கனு கெஞ்சினேன்.

அவரோ, சூ சூ நான் காரை விட்டே வெளியே வர மாட்டேன். அது பெண்கள் கல்லூரி. நான் ஒரு பெரிய ஸ்டார். பெண்கள் கல்லூரிக்கு வெளியே என்னை யாராவது பார்த்தால் நன்றாக இருக்காது என அன்டர்பேண்ட்டிலேயே வந்தார். காரை விட்டு வெளியே வர மாட்டேனு சொல்லிவிட்டு வெளியே வந்துவிட்டார். ஒட்டு மொத்த குயின் மேரிஸ் கல்லூரியும் கமலையும், அவர் கால்களையும் தான் பார்த்தது. எனக்கு அவமானமா போச்சு என்றார்.

Read more: OMG..! ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்ந்த தங்கம்.. சவரன் ரூ.9 ஆயிரத்தை கடந்தது..!!

Next Post

குலதெய்வம் கோவில் மண்ணை வீட்டில் வைப்பதால் கிடைக்கும் அதிர்ஷ்டம்!

Tue Jun 3 , 2025
குலதெய்வம் கோவிலுக்கு செல்லும் போது அங்கிருக்கும் சில பொருட்களை வீட்டுக்கு கொண்டு வந்து வைக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. இதனால் அதிர்ஷ்டம் ஏற்படும், செல்வ செழிப்பு பெருகும் என்ற நம்பிக்கை உண்டு. அதில் முக்கியமான ஒன்று குலதெய்வம் கோவிலில் இருந்து எடுத்து வரக்கூடிய மண். இதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம். நம் வாழ்க்கையில் தீர்க்க முடியாத பிரச்னைகள் ஏற்படும் போது குலதெய்வம் கோவிலுக்கு சென்று வந்தால் அவை தீரும் […]
kulatheivam man 11zon

You May Like