தக்லைஃப்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்டோர் நடிப்பில் உருவான தக்லைஃப் படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. த்ரிஷா, அபிராமி, நாசர், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். நாயகன் படத்திற்கு பிறகு 34 ஆண்டுகளுக்கு பின் கமல்ஹாசன் – மணிரத்னம் காம்போவில் உருவான படம் என்பதால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது.
அதன்படி, படத்தின் பாடல்கள், ட்ரெயலர் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. படத்தின் புரோமோஷன் பணிகளிலும் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் தக்லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல் தமிழில் இருந்து தான் கன்னட மொழி உருவானதாக கூறினார். அவரின் இந்த கருத்துக்கு கன்னடர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கர்நாடகாவில் இது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது.
கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டால் தான் கர்நாடகாவில் படம் திரையிடப்படும் என்று அம்மாநில திரைப்பட சங்கம் எச்சரித்தது. கமல்ஹாசன் நீதிமன்றத்தை நாடிய நிலையில், நீதிமன்றமும் கன்னடர்களின் மனதை காயப்படுத்திய கமல்ஹாசன் ஏன் மன்னிப்பு கேட்கவில்லை என்று கேள்வி எழுப்பியது. ஆனால் தவறு செய்திருந்தால் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றும் கமல் திட்டவட்டமாக கூறிவிட்டது.
இப்படி சர்ச்சை மற்றும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளது. கமல், சிம்பு உள்ளிட்டோரின் நடிப்புக்கு பாராட்டு கிடைத்தாலும், படம் மெதுவாக செல்வதாகவும், திரைக்கதையில் அரைத்த மாவையே அரைத்துள்ளதாகவும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
தக் லைஃப்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?
இந்த நிலையில் ‘தக்லைஃப்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 800 க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியிடப்பட்ட இந்த படம் முதல் நாளில் 3,000 க்கும் மேற்பட்ட காட்சிகள் வெளியிடப்பட்டது.. சென்னை மற்றும் செங்கல்பட்டு போன்ற நகரங்கள் மட்டும் 110 திரைகளில் 1,100 க்கும் மேற்பட்ட காட்சிகள் ஓடியது.. கோவையில் படம் 95 திரையரங்குகளில் 790 காட்சிகளும் ஓடியது.. மதுரையில் 49 திரைகளில் 491 காட்சிகள் ஓடியது.. இந்த படம் முதல்நாளில் இந்தியாவில் ரூ. 17 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
மற்ற மொழிகளின் நிலவரம் என்ன?
தமிழில் முதல் நாள் வசூல் என்பது, தக்லைஃப் படத்திற்கு நல்ல தொடக்கமாக அமைந்தாலும் மற்ற மொழிகளில் சுமாரான வரவேற்பு கிடைத்துள்ளது.. இந்த படம் வெளியான முதல் நாளில் இந்தி பதிப்பில் ரூ. 25 லட்சம் மட்டுமே வசூலித்தது. இது வட இந்தியாவில் மோசமான வரவேற்பை காட்டும் வகையில் அமைந்துள்ளது.
தக்லைஃப் படம் தெலுங்கில் ரூ.53 வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஷங்கர் – கமல்ஹாசன் கூட்டணியில் உருவான இந்தியன் படம் முதல் நாளில் ரூ. 25.6 கோடி வசூல் செய்திருந்த நிலையில், தக்லைஃப் ரூ.17 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. எனினும் வரும் நாட்களில் தக்லைஃப் படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..
Read More : “ஓஹோ.. கல்யாணமே பண்ணிட்டாங்களா”..? வைரலாகும் ரவி மோகன் – கெனிஷாவின் திருமண புகைப்படம்..?