திருமண தடை, குழந்தை பேறு… தீர்வுகள் தரும் கந்தகிரி முருகன் கோயில்..!! எங்கே இருக்கு..?

temple 1 2

இந்திய ஆன்மிக மரபில், மலை மீது எழுச்சி தரும் கோயில்கள் என்றும், பக்திக்கு வலிமை சேர்க்கும் இடங்களாகவும் பெருமை பெற்றுள்ளன. அவ்வாறானதொரு திருத்தலமாக, நாமக்கல் அருகேயுள்ள கூலிப்பட்டியில் அமைந்துள்ள கந்தகிரி பழனி ஆண்டவர் கோயில் மக்கள் நம்பிக்கையையும், பக்தியின் ஆழத்தையும் தழுவிய மலைமேல் காட்சியளிக்கிறது. மூன்று நூற்றாண்டுகளாக பக்தர்களை தன்னை நோக்கி இழுக்கும் இத்தலம், முருகபெருமானின் அருள் பெரும் இடமாக விளங்குகிறது.


இங்கு ‘அண்டி கோலத்தில்’ மலைமீது திகழும் முருகனைக் காணும் போது, பழனி மலையை நேரில் சென்று பார்த்த உணர்வு வருகிறது. திருமண தடை நீங்க, குழந்தைப்பேறு கிடைக்க, மனதுக்குள் உள்ள கோபம், ஏக்கம், சோகம் போன்ற சுழற்சி எண்ணங்களை அகற்றி நிம்மதியை உணர… இந்த கோயிலின் சற்றே விலகிய அமைவிடம், ஒரு ஆன்மிகச் சூரியனாக இன்று மின்னிக்கொண்டிருக்கிறது.

இக்கோவிலின் மூலவரான பழனி ஆண்டவரை வழிபட்டால் விரைவில் திருமணமாகும் என்பதும், முருகனுக்கு சஷ்டி பூஜை செய்து மனமுருக பிரார்த்தனை செய்தால் குழந்தை பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மலையின் மீது ஏறத் தொடங்கி சில படிகளை கடந்தால் தெற்கு பகுதியில் சிவபெருமான் கழுத்தில் பாம்புடன் காட்சி அளிக்கிறார்.

நுழைவாயிலை கடந்து ஏறத் தொடங்கியதும் ஞானப் பழத்தால் ஏற்பட்ட பிரச்னையில் கோபித்துக் கொண்டு கயிலை மலையை விட்டுச் சென்ற முருகனை சமாதானப்படுத்தும் வகையிலும், முருகன் தந்தைக்கு உபதேசம் செய்யும் நிகழ்வும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மலையின் மேலே இடும்பன் கோயிலும், விநாயகர் சன்னதியும் அமைத்துள்ளது. இங்குள்ள இடும்பனை வணங்கினால் கோபம், சூழ்ச்சி, வஞ்சகம், ஆத்திரம் போற்றக் கெட்ட குணங்கள் அனைத்தும் நம்மை விட்டு நீங்கும் எனக் கூறப்படுகிறது.

Read more: கும்பகோணத்தில் எந்த கோயிலுக்குச் சென்றால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்..?

Next Post

அலெர்ட்!. நாளைமுதல் எல்லாம் மாறப்போகுது!. புது ரூல்ஸ்!. 6 முக்கிய பெரிய மாற்றங்கள் இதோ!

Sat May 31 , 2025
ஜூன் மாதம் சாதாரண குடிமக்களுக்கு முக்கியமானதாக இருக்கப் போகிறது. ஏனெனில் ஜூன் 1 முதல் எல்பிஜி எரிவாயு விலைகள் முதல் நிலையான வைப்பு வட்டி விகிதங்கள் வரை சில முக்கியமான மற்றும் பெரிய மாற்றங்கள் இருக்கலாம். எனவே நாளை (ஜூன் 1) முதல் என்ன மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதை இனி பார்க்கலாம். நாளை முதல் கேஸ் சிலிண்டர், ரேஷன் கார்ட், ஆதார் அட்டை, கிரெடிட் கார்ட், ஏடிஎம் மூலம் பிஎப் […]
june 1st changes 11zon

You May Like