Flash : கனிமொழி எம்.பி.யின் தாயார் ராசாத்தி அம்மாள் மருத்துவமனையில் அனுமதி! என்ன ஆச்சு?

kanimozhi mother 1

கனிமொழி எம்.பி.யின் தாயார் ராசாத்தி அம்மாள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளளார்..

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவி ராசாத்தி அம்மாள் சென்னை சி.ஐ.டி காலனியில் உள்ள மகள் கனிமொழி உடன் வசித்து வருகிறார்.. வயது மூப்பு காரணமாக இவர்க்கு சமீப காலமாகவே அஜீரண கோளாறு மற்றும் வயிற்று வலி பிரச்சனை இருந்து வருகிறது.. இதற்காக கடந்த ஆண்டு ஜெர்மனியில் உள்ள உள்ள பிரபல மருத்துவமனை சென்ற ராசாத்தி அம்மாள் அங்கு 20 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்..


இந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ராசாத்தி அம்மாள் சென்னைக்ரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளளார்.. அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்..

வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உரிய சிகிச்சைகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.. தற்போது சிகிச்சைக்கு பின்னர் ராசாத்தி அம்மாளின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Read More : தலைமை நீதிபதி மீது செருப்பு வீச முயன்ற வழக்கறிஞர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை.. அட்டர்னி ஜெனரல் ஒப்புதல்!

English Summary

Kanimozhi MP’s mother Rasathi Ammal has been admitted to a private hospital in Chennai.

RUPA

Next Post

கரூர் துயரம்.. பிரேத பரிசோதனை மேஜை… இத்தனை குழப்பம் ஏன்? அண்ணாமலை கேள்வி..

Thu Oct 16 , 2025
Annamalai has raised the question, "Why is there so much confusion over how many tables were set up for the area inspection in the Karur incident?"
524562 kannamalai 1

You May Like