பிரபல கன்னட நடிகர் சந்தோஷ் பாலராஜ் தனது 34வது வயதில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு காலமானார்.
கன்னட நடிகர் சந்தோஷ் பாலராஜ் (வயது 34), இன்று காலை பெங்களூரு குமாரசாமி லேஅவுட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சினைகள் காரணமாக கடுமையான மஞ்சள் காமாலை ஏற்பட்டதால் காலை 9:30 மணியளவில் அவர் காலமானார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.. சந்தோஷ் பாலராஜக் நடிகர் கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் தீவிர சிகிச்சையில் இருந்தார்.
மஞ்சள் காமாலை காரணமாக ஆரம்பத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்தோஷ் பின்னர் வீடு திரும்பினார். பின்னர், உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து மீண்டும் அனுமதிக்கப்பட்டார். இந்த வார தொடக்கத்தில் அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில் கோமா நிலைக்குச் சென்றதாகவும், ஐசியுவில் சிகிச்சை பெற்ற போதிலும், அவரது உறுப்புகள் குணமடையவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.. அவரின் மறைவுக்கு பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்…
கரியா 2, கெம்பா, கணபா, பெர்க்லி மற்றும் சத்யா போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் சந்தோஷ். கன்னடத் திரைப்படத் துறையில் குறிப்பிடத்தக்க நபரான மறைந்த அனேகல் பாலராஜின் மகன் இவர். கணபா படம் சந்தோஷின் திரைவாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது.. இந்த படத்தில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய அவருக்கு நல்ல அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.
தனது தந்தை அனேகல் பாலராஜ் மூலம் கெம்பா (2009) படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார் சந்தோஷ்.. இதை தொடர்ந்து தர்ஷன் நடித்த கரியா என்ற வெற்றிப் படத்தைத் தயாரித்த அனேகல், இந்த படத்தின் தொடர்ச்சியான கரியா 2 படத்தில் தனது மகனை நடிக்க வைத்தார். இதன் மூலம் கன்னட திரையுலகில் சந்தோஷின் இடத்தை அவரின் தந்தை உறுதிப்படுத்தினார். பிரபு சிரினிவாஸ் இயக்கிய இந்த ஆக்ஷன் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
சந்தோஷ் தனது முரட்டுத்தனமான நடிப்பு மற்றும் தீவிரமான, அதிரடி கதாபாத்திரங்களை ஆழமாக சித்தரிக்கும் திறனுக்காக அறியப்பட்டார். மே 2022 இல், அனேகல் பாலராஜ் ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார்.. அவர் சாலையைக் கடக்கும்போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : எம்.பி. மஹுவா மொய்த்ரா இந்த பாலிவுட் நடிகரை காதலித்தாராம்.. காதல் கடிதம் கூட அனுப்பினாராம்..