திருமணமான இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற பெந்தேகோஸ்தே தேவாலயப் போதகர் ரெஜிமோன், போலீசாரால் கைதுசெய்யப்பட்ட சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் இளம்பெண் ஒருவர் சமீப காலமாக கடுமையான உல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்திருக்கிறார். இந்த நிலையில் மேக்காமண்டபம் பகுதியிலுள்ள பூரண சுவிஷேச பெந்தெகொஸ்தே சபைக்கு வழிபாட்டுக்கு சென்றிருக்கிறார். நீண்ட நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் விஷயத்தை போதகர் ரெஜிமோனிடம் கூறியிருக்கிறார்.
வழிபாட்டில் முழு ஈடுபாடாக இருக்க வேண்டும், மாத வருமானத்தில் 10% அளவுக்கு காணிக்கை செலுத்த வேண்டும் என்று அந்த போதகர் அறிவுறுத்தியிருக்கிறார். ஆனால் உடல் நலனில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் மீண்டும் போதகரை நாடியுள்ளார். அப்போது அந்த போதகர், “உன் கணவனின் விந்துவில் விஷம் இருக்கிறது. நீ உன் கணவனுடன் உறவு கொள்ளக்கூடாது. அதற்கு பதிலாக முழு ஆசியை கொண்ட என்னிடம் உறவு கொண்டால் எல்லாம் சரியாகிவிடும்” என்று சொல்லி இளம்பெண்ணிடம் அத்துமீறிய இருக்கிறார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த பெண் அங்கிருந்து தப்பித்து, காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இளம்பெண்ணிடம் அத்துமீறிய போதகரை கைது செய்துள்ளனர். நோயை குணப்படுத்துவதாக சொல்லி போதகர் ஒருவர் இளம்பெண்ணிடம் அத்துமீறிய சம்பவம் கன்னியாகுமரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரின் கூற்றுப்படி, அந்த பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிறது, ஆனால் உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் பிற தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். அக்கம் பக்கத்தினரின் பேச்சை கேட்டுக்கொண்டு அவர், மேக்காமண்டபம் பகுதியிலுள்ள பூரண சுவிஷேச பெந்தெகொஸ்தே சபைக்கு வழிபாட்டுக்கு சென்றதாக கூறினர்.