எதிர்நீச்சல் சீரியல் கடந்த எபிசோடில் பல உணர்ச்சிகரமான திருப்பங்கள் நடந்தன. வீட்டிற்கு வந்திருந்த விஷாலாட்சியின் தம்பி, “இந்த குடும்பம் இன்னும் பல சங்கடங்களை சந்திக்கப் போகிறது, இதை நான் சொல்லவில்ல, புளியங்குடி மதுரைவீரன் சொல்றான்!” என்கிறார். இதைக் கேட்ட கதிர் உடனே ஆத்திரமடைந்து, “சீர் கொடுக்க வந்தீங்க, தேவையில்லாமல் எதுவும் பேசாதீங்க, வெளியே போங்க!” என்று சொல்லி அனுப்புகிறார்.
விசாலாட்சி தன்னுடைய தம்பிக்கு ₹100 கொடுத்து, என்னிடம் இந்த காசு தான் இருக்கு என்கிறாள், உடனே அவர் அக்கா, எனக்கு எப்போதும் 10 ரூபாய் தான் தருவா, இப்போ 100 ரூபாய் கொடுத்து இருக்க அக்கா, ரொம்ப சந்தோஷம் என்கிறார். அதோடு எனக்கு கடைசி வரை நீ தீபாவளி சீர் செய்யணும் என்று மனம் நெகிழச் சொல்கிறாள். இதை பார்த்து நெகிழ்ந்துபோகும் பார்கவி, தன்னுடைய அப்பா தலை தீபாவளிக்காக வைத்த ஆசைகளை நினைத்து வருந்துகிறார்.
பார்கவி தனது அப்பா நினைவில் கண் கலங்க, ஜனனி, “உனது அப்பா மேலிருந்து உன்னை பார்த்துக்கொண்டிருக்கிறார். சிரிச்சுக்கோ!” என்று ஆறுதல் கூறுகிறார். இன்றைய எபிசோடில், கதிர் தன் அம்மா விசாலாட்சிக்கு புதிய புடவை வாங்கி தருகிறார். ஆனால் அதைப் பார்த்த விசாலாட்சி, “இது நான் கட்டும் புடவை மாதிரி இல்லை, சின்ன பொண்ணுங்க கட்டும் புடவை மாதிரி இருக்கு!” என்கிறார். இதனைக் கேட்டு கரிகாலன், “வடிவுக்கரசிக்கா வாங்கி வந்து விட்டீங்களா?” என நையாண்டி செய்கிறார்.
அதோடு, கரிகாலன் தர்ஷனிடம், “ரூமுக்குள் போய் கதவை சாத்திக்கிறீங்க, வெளியே வந்தவுடன் ஒன்றும் தெரியாதது போல நடிக்கிறீங்க!” என கொச்சையாக பேச,இதனால், ஆத்திரப்படும் பார்கவி மரியாதையாக பேசுங்கள் என ஆத்திரப்பட்டு கத்துகிறாள். இதையடுத்து, இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.
Read more: H-1B விசா கட்டணம் இல்லை.. இந்திய தொழில் வல்லுநர்கள், மாணவர்களுக்கு குட்நியூஸ்..



