ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் முதல் பாகம் முடிவடைந்த நிலையில் இரண்டாவது பாகம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இரு குடும்பத்தையும் இணைப்பதை கதைக்களமாக கொண்ட இந்த சீரியலில் கார்த்திக் ராஜா லீட் ரோலிலும் ரேவதி ஹீரோயினாக நடித்துள்ளார்.
‘கார்த்திகை தீபம் 2’ சுமார் 965 எபிசோடுகள் கடந்தும், இரண்டரை ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போதைய கதைக்களத்தை பொறுத்தவரை கார்த்திக் மனதில் இடம் பிடிக்க ரேவதி பல முயற்சிகளை செய்து வருகிறார். மகேஷ் என்ன ஆனார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. ரோகிணி கர்ப்பமாக உள்ளார்; நவீன் சிறையில் சிக்கியிருக்கிறார்.
இதற்கிடையே துர்காவுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. துர்காவிற்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை உண்மையில் சீட்டிங் பேர்வளி என்பதும், அவளுக்கான பெற்றோராக நடித்தவர்கள் ஒரு திருட்டுக் கும்பல் என்பதும் வெளிப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் சந்திரகலாவின் சதி இருப்பது வெளிச்சத்திற்கு வரலாம். குண்டு அகற்றப்பட்ட கான்ஸ்டபிள் எப்போது வேண்டுமானாலும் கண் விழிக்கலாம்.
அவர் உயிர் பெற்றால் அல்லது அவரது செல்போன் மூலம் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தால், சாமுண்டீஸ்வரி குடும்பமும் பரமேஸ்வரி குடும்பமும் ஒன்றாகும் வாய்ப்பு உள்ளது. சந்திரகலா வீடில் இருந்து வெளியேற்றப்படுவதோ, அல்லது சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதோ சாத்தியம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கதையின் இறுதி கட்டம் எப்படிக் காட்சிப்படுத்தப்படும் என்பது குறித்து ரசிகர்களிடையே பெரும் ஆர்வம் நிலவுகிறது. “இயக்குனரின் கையில் தான் கதையின் திசை உள்ளது. இறுதி வரை திருப்பங்களுடன் ரசிகர்களை ஈர்ப்பார்” என தொடரின் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
Read more: தலைநகர் டெல்லி காற்றில் கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமி…! விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்…!



