80களில் சாக்லேட் பாயாக திரையுலகில் பிரபலமானவர் நடிகர் கார்த்திக். தனித்துவமான நடிப்பு, நகைச்சுவை நேரம், உடல் மொழி என பல திறமைகளால் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தார். பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகனாக பிறந்த கார்த்திக், பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே மாபெரும் வெற்றி பெற்று, கார்த்திக்கிற்கு புதிய வாய்ப்புகளைத் திறந்தது.
குறிப்பாக, அந்தப் படத்தில் ராதாவுடன் அவருடைய ஆன்-ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து அமரன், அக்னி நட்சத்திரம் போன்ற படங்களில் சாக்லேட் பாயிலிருந்து ரக்கட் ஹீரோவாக மாறி, தனது பல்திறமையை நிரூபித்தார். அதேசமயம், உள்ளத்தை அள்ளித்தா போன்ற காமெடி படங்களிலும் பிரபலமானார். எவ்வளவு திறமையான நடிகரானாலும், அவரைப் பற்றி சில விமர்சனங்களும் இருந்தன.
குறிப்பாக “ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தாமதமாக வருவார்” என்பதுபோன்ற குற்றச்சாட்டுகள். ஆனால், ஒருமுறை கேமரா முன் வந்துவிட்டால், “ஒரே டேக்கில் காட்சியை முடிப்பார்” என்ற பெயரையும் பெற்றிருந்தார். இந்நிலையில், நடிகர் கார்த்திக் குறித்து குஷ்பு பகிர்ந்த தகவல் வெளிவந்துள்ளது. சுந்தர்.சி மற்றும் குஷ்பூ காதலித்துக் கொண்டிருந்த காலத்தில், அந்த விஷயத்தை முதலில் அறிந்தவர் கார்த்திக்.
குஷ்பூவிடமும், சுந்தர்.சியிடமும் எப்போதும் ஜாலியாக பேசும் கார்த்திக், அவர்களின் காதலை முதலில் அறிந்தவர் மட்டுமல்லாமல், அவர்களின் திருமணத்திற்கும் முதல் ஆளாகவும் வந்துள்ளார். திருமணத்தில் கார்த்திக்கைக் கண்ட குஷ்பூவும், சுந்தர்.சியும் உடனே அவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுள்ளனர். பின்னர், கார்த்திக் வீட்டுக்கு திரும்பி, அவர்களுக்கு ஃபோன் செய்து, “நீங்கள் என் காலில் விழுந்தது நினைவில் வந்தது… எனக்கு உண்மையிலேயே எமோஷனல் ஆனது” என்று தேம்பி தேம்பி அழுதாராம்.
Read more: வங்கதேசத்தை அச்சுறுத்தும் நோய்!. பலி எண்ணிக்கை 300ஐ நெருங்கியது!. இந்திய மாநிலங்களுக்கு எச்சரிக்கை!.



