கரூர் விவகாரம் தொடர்பாக அவதூறு வீடியோக்கள் பதிவிட்ட 3 பேரை சென்னை காவல்துறை கைது செய்துள்ளது..
தவெக தலைவர் விஜய் கரூரில் மேற்கொண்ட பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. இதுகுறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அவர் இரண்டாவது நாளாக பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பிக்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.. எனினும் இந்த சம்பவத்திற்கு காரணமான தவெக கட்சியினரோ அக்கட்சி தலைவர் விஜய்யோ இதுவரை கரூருக்கு செல்லாதது அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி பொதுமக்களிடையேயும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.. விஜய் கரூரில் இருந்து சென்னை சென்றிருக்க கூடாது என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே திமுகவின் சதியே இந்த துயரத்திற்கு காரணம் என்று தவெகவினர் குற்றம்சாட்டி உள்ளனர்.. மேலும் சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்..
இன்று இதுகுறித்து வீடியோ வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.. மேலும் சமூக ஊடகங்களில் கரூர் துயரம் குறித்து சில பரப்பக் கூடிய விஷமத்தனமான பொய் செய்திகளையும் வதந்திகளையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்.. எந்த அரசியல் கட்சி தலைவர்களும் அப்பாவி பொதுமக்களும், தொண்டர்களும் இறப்பதை எப்போதும் விரும்பமாட்டார்கள்.. உயிரிழந்தவர்கள் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களும் நம் தமிழ் உறவுகள் தான்.. எனவே சோகமும் துயரமும் சூழந்திருக்கும் நிலையில் கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்ப வேண்டாம். அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்..” என்று குறிப்பிட்டுள்ளார்..
இதனிடையே கரூர் நெரிசல் பற்றி சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட.. பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்திகளை பரப்பிய 25 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.. வழக்குப்பதிவு செய்யப்பட்ட 25 பேரையும் கைது செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் யாரும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் எனவும் பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது..
இந்த நிலையில் கரூர் விவகாரம் தொடர்பாக அவதூறு வீடியோக்கள் பதிவிட்ட 3 பேரை சென்னை காவல்துறை கைது செய்துள்ளது.. சென்னையை சேர்ந்த சகாயம், சிவனேசன், சரத்குமார் ஆகியோரை சென்னை காவல்துறை கைது செய்துள்ளது. இவர்களில் ஒருவர் பாஜக நிர்வாகி எனவும், இருவர் தவெக நிர்வாகிகள் என்று கூறப்படுகிறது.. இந்த 3 பேரிடமும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
Read More : Flash : தலைமறைவான புஸ்ஸி ஆனந்த் சேலத்தில்? சினிமா பாணியில் போலீசாரை குழப்பியதாக தகவல்..