நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கரூரில் பரப்புரையில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது. அவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கரூர் மாவட்டமே சோகத்தில் மூழ்கியுள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்களும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து கரூர் காவல்துறையினர், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த், இணைச் செயலாளர் சி. டி. நிர்மல் குமார் மற்றும் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில், புஸ்ஸி ஆனந்த் மற்றும் மதியழகன் ஆகியோர் இருக்கும் இடம் தெரியவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, அவர்கள் இருவரும் தலைமறைவாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கரூரில் தவெக கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாகி இருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



