கரூர் அருகே கல்குவாரிக்கு எதிராக புகாரளித்த காரணத்தால் கூலிப்படையினரால் விபத்து ஏற்படுத்தி கொலை செய்யப்பட்ட ஜெகநாதன் என்பவரின் மனைவி உடலைப் பெற்றுக் கொண்டார்.
அரவக்குறிச்சி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் அரவக்குறிச்சியில் உள்ள கல்குவாரிக்கு அருக ஜெகநாதன்என்பவரின் விவசாய நிலம் உள்ளது. செல்வகுமார் என்பவரின் கல்குவாரிக்கு 2015ல் அனுமதி நிறைவடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து அரசு அனுமதி பெறாமல் இவ்வளவு காலம் கல்குவாரியை நடத்தி வந்துள்ளனர். இதற்காக கனிம வளத்துறையினரிம் புகார் தெரிவித்தார் ஜெகநாதன். இதனால் கனிம வளத்துறை அதிகாரிகள் அவரது கல்குவாரியை மூடினர். இதனால் கடும் கோபமடைந்த செல்வகுமார் ஜெகநாதனை கூலிப்படையினருக்கு காசு கொடுத்து விபத்துஏற்படுத்தி கொலை செய்ய கேட்டுக்கொண்டார்.

க.பரமத்தி அருகே ஜெகநாதன் சென்று கொண்டிருந்தபோது தனியார்் கல்குவாரிக்கு சொந்தமான வேன் இவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அந்த வேன் செல்வகுமாருக்கு சொந்தமானது என தெரியவந்து. இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். வேன் ஓட்டுனர் சக்திவேல் மற்றும் செல்வகுமார் ஆகியோரை கைது செய்தனர்.

இதனிடையே ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும் , வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் , கணவரின் உடலை மறு பரிசோதனை செய்ய வேண்டும் என கூறி உடலை வாங்க மறுத்து அவரது மனைவி ரேவதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து ரேவதி மற்றும்மகன் அபிஷேக்கிடம் பேச்சுவார்த்தை நடத்திய கரூர் மாவட்ட ஆட்சியர் ’’ உங்கள் கோரிக்கைகளை ஏற்க முடியாது, உடல் மறு கூறாய்வுக்கான அவசியம் இந்த வழக்கில் இல்லை, மேலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். அதே சமயம் இழப்பீடு குறித்து முடிவெடுக்க முடியாது’’ என்றார்….