கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.. அதே போல் சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழுவும் கடந்த 5-ம் தேதி முதல் விசாரணை மேற்கொண்டு வந்தது.
இதனிடையே கரூர் சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.. மேலும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்தும் உத்தரவிட்டுள்ளது.. உச்சநீதிமன்ற உத்தரவின் முழு விவரம் வெளியாகி உள்ளது.. அதன்படி கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசனின் ஒரு நபர் ஆணைய விசாரணையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான ஆவணங்களை ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு கரூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியிடம் சமர்பித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள், வாக்குமூலங்களை எழுத்துப்பூர்வமாக விசாரணைக்குழு சமர்பித்துள்ளது. இந்த ஆவணங்களையு நீதிபதி கையெழுத்திட்டு நீதிபதி பெற்றுக் கொண்டார்..
இந்த நிலையில் கரூரில் விஜய் பரப்புரை கூட்ட நெரிசல் பலி தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், குஜராத் கேடரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் குமார், இன்று முதல் தனது விசாரணையை நடத்த உள்ளார். சிறப்பு விசாரணை குழு ஏற்கனவே அனைத்து ஆவணங்களையும் ஒப்படைத்தது. விரைவில் சிபிஐ விசாரணையும் நிறைவடைந்து அதற்கான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கரூரில் SIT அலுவலகம் அருகே எரிந்த நிலையில் காகிதங்கள் கிடந்தது.. துண்டு துண்டுக்கப்பட்ட நிலையில் காகிதம் எரிந்து நிலை கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. மேலும் எரிக்கப்பட்ட காகிங்கள் அருகே 32 ஜிபி பென்டிரைவும் கிடந்தது.. சிறப்பு புலனாய்வு குழுவினர் இன்றுடன் அலுவலகத்தை காலி செய்வதால், தேவையற்ற காகிதங்கள் எரிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது..



