கரூரில் கடந்த 27-ம் தேதி விஜய் நடத்திய பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.. இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியது. இது தொடர்பாக தவெகவின் கரூர் மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்..
இதனிடையே இந்த சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வு குழுவை (SIT) அமைத்தது.. இந்த குழு கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.. இந்த நிலையில் இதுகுறித்து மதியழகனிடம் விசாரிக்க வேண்டும் 5 நாட்கள் போலீஸ் கஸ்டடி தேவை என சிறப்புப் புலனாய்வு வழக்கறிஞர் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்..
இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. அப்போது மதியழகனிடம் விசாரிக்க 5 நாட்களில் அவரை காவலில் எடுக்க வேண்டும் என்று சிறப்பு புலனாய்வு குழு தரப்பு வாதிட்டது.. ஆனால் ஏற்கனவே கரூர் காவல்துறை அவரிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கை சிறப்பு புலனாய்வு குழுவிடம் அளிக்கப்பட்டுள்ளது.. அதனடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொள்ளலாம் என்று தவெக வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் மதியழகனை போலீஸ் கஸ்டடியில் எடுக்க அனுமதி வழங்கக் கூடாது என்று வாதிட்டார்.. அனைத்து வாதங்களையும் கேட்ட 2 நாட்கள் மதியழகனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினர்.
Read More : கரூர் செல்ல விஜய் போட்ட கண்டிஷன் என்னென்ன தெரியுமா? பிரதமருக்கு இணையான பாதுகாப்பை கேட்கும் தவெக?