கரூர் துயரம்.. 34 பேர் பலி.. கருத்து சொல்லாமல் சென்னை புறப்பட்ட விஜய்..

tvk vijay n

தவெக தலைவர் விஜய் சனிக்கிழமைகளில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.. அந்த வகையில் இன்று மதியம் நாமக்கல் சென்ற அவர் அங்கிருந்து மாலை 7 மணியளவில் கரூர் சென்றார்.. முன்னதாக 12 மணிக்கு விஜய் கரூர் செல்வார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் 7.30 மணியளவில் தான் கரூரில் பிரச்சாரம் செய்யவிருந்த இடத்திற்கு சென்றடைந்தார்.. மதியம் 12 மணியில் இருந்தே உணவு தண்ணீர் இல்லாமல் பலர் அங்கு காத்திருந்ததாக கூறப்படுகிறது..


விஜய்யை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கானோர் அங்கு கூடியிருந்த நிலையில், அங்கு அதிக கூட்ட நெரிசல் ஏற்பட்டது.. விஜய் பேசிக் கொண்டிருந்த போதே பலர் மயங்கி விழுந்த நிலையில் அவர் புறப்பட்ட உடன் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் மயங்கி கீழே விழுந்தனர்.. இதனால் 6 குழந்தைகள், 16 பெண்கள், 9 ஆண்கள் என இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர்.. மேலும் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. ஒரு அரசியல் கட்சி தலைவரின் தேர்தல் சுற்றுப்பயணத்தில் இவ்வளவு பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கரூரில் இருந்து தனது பிரச்சார வாகனத்தில் புறப்பட்ட விஜய் சற்று முன்பு திருச்சி விமானம் நிலையம் சென்றார்.. அப்போது அவரிடம் கரூர் துயரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.. ஆனால் விஜய் எந்த கருத்தையும் கூறாமல் சென்னை புறப்பட்டு சென்றார்.. இவ்வளவு பெரிய துயரம் நடந்திருக்கும் போது விஜய் கருத்து கூறாமல் சென்றது பொதுமக்களிடையே மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது..

Read More : கரூரில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது… பிரதமர் மோடி இரங்கல்..

RUPA

Next Post

பரபரப்பு..! தவெக தலைவர் நடிகர் விஜய் கைது செய்யப்படுவாரா...? முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த பதில்...!

Sun Sep 28 , 2025
கரூர் சம்பவம் குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் உடனடியாக அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட குழந்தைகள், பெண்கள் உள்பட 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை […]
karur TVK vijay 2025

You May Like