கரூர் பெருந்துயரம்.. புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட தவெக நிர்வாகிகளிடம் சிபிஐ விசாரணை..!

aadhav arjuna bussy anand

கரூர் கூட்ட நெரிசலிலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கு விசாரணைக்காக சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆதவ், புஸ்ஸி ஆனந்த் நிர்மல் ஆகியோர் ஆஜரானார்கள்..

கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வந்தது.. அதே போல் சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழுவும் விசாரணை மேற்கொண்டு வந்தது.


இதனிடையே கரூர் சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டது.. மேலும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்தும் உத்தரவிட்டது..  அதன்படி இந்த வழக்கை கடந்த 19-ம் தேதி முதல் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

காவல்துறை அதிகாரிகள், வீடியோகிராபர்கள், ஆம்புலன்ஸ் ட்ரைவர்கள், உரிமையாளர்கள் என 306 பேருக்கு சிபிஐ சம்மன் அனுப்பிய நிலையில் அவர்களை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.. தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக தவெகவின் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் ஆர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது..

இந்த நிலையில் இன்று தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ், அர்ஜுனா, இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆஜரானார்கள்.. மேலும் கரூர் மாவட்ட தவெக செயலாளர் மதியழகனும், கரூர் நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோரும் விசாரணைக்காக நேரில் ஆஜராகி உள்ளார்.. அவர்களின் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Read More : பெற்றோர்களே உஷார்..!! தொட்டிலில் விளையாடிய பள்ளி மாணவன்..!! கழுத்தில் சேலை இறுக்கியதில் மூச்சுத்திணறி மரணம்..!!

RUPA

Next Post

பெற்றோர்களே உஷார்..!! தொட்டிலில் விளையாடிய பள்ளி மாணவன்..!! கழுத்தில் சேலை இறுக்கியதில் மூச்சுத்திணறி மரணம்..!!

Mon Nov 24 , 2025
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த கோவர்த்தனகிரி, காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான சதீஷ் (41) – மீனா (38) தம்பதியினரின் மகன் ஹரிஹரன் (13) அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். சதீஷ் மற்றும் மீனா தம்பதியரின் உறவினரான ஆந்திராவைச் சேர்ந்த நந்தினி என்பவர் பிரசவத்திற்காக சில நாட்களுக்கு முன் சதீஷின் வீட்டிற்கு வந்து தங்கியிருந்தார். அப்போது குழந்தையைத் தூங்க வைக்க, […]
Thottil 2025

You May Like