கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வந்தது.. அதே போல் சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழுவும் விசாரணை மேற்கொண்டு வந்தது.
இதனிடையே கரூர் சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டது.. மேலும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்தும் உத்தரவிட்டது.. அதன்படி இந்த வழக்கை தற்போது சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
காவல்துறை அதிகாரிகள், வீடியோகிராபர்கள், ஆம்புலன்ஸ் ட்ரைவர்கள், உரிமையாளர்கள் என 306 பேருக்கு சிபிஐ சம்மன் அனுப்பிய நிலையில் அவர்களை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினர்.. மேலும் இந்த வழக்கு தொடர்பாக தவெகவின் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் ஆர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் சிபிஐ 2 நாட்கள் விசாரணை மேற்கொண்டது..
இந்த சூழலில் கரூர் மாவட்ட காவல்துறையினர், தவெக நிர்வாகிகள் டெல்லியில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது.. அதன்படி, வெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் உள்ளிட்டோர் ஆஜராகினர்.. டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக மாநில நிர்வாகிகள் ஆஜராகினர்.. அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக தவெக நிர்வாகிகளிடம் 10 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.. விஜய் தாமதமாக வந்தது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி சிபிஐ விசாரணை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.. விஜய் வருகையில் தாமதம் இருந்ததா? இருந்தால் என்ன காரணம் எனவும் அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.. அதே போல் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கான அனுமதி வழங்கப்பட்டிருந்ததா? அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக எவ்வளவு பேர் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள் என கேட்டதாகவும் கூறப்படுகிறது..
தவெக தரப்பில் செய்யப்பட்ட ஏற்பாடுகள் என்னென்ன? திட்டமிட்ட நேரத்தில் நிகழ்ச்சி நடத்தப்பட்டதா? என துருவி துருவி விசாரனை நடத்திய அதிகாரிகள் அனுமதி கடிதம் உள்ளிட்ட ஆவணங்களையும் ஆய்வு செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. அதே போல் கரூர் காவல்துறை அதிகாரிகளிடமும் நேற்று விசாரணை நடைபெற்றது.. தவெக நிர்வாகிகளிடம் 2-வது நாளாக இன்றும் விசாரணை நடைபெற உள்ளது..



