கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.. அதில் பேசிய அவர் “ கரூரில் நடந்தது பெருந்துயரம்.. இதுவரை நடக்காத துயரம்.. இனி நடக்கக் கூடாத துயரம்.. கனத்த இதயத்துடனும், பெருந்துயரத்துடனும் தான் இன்னும் இருக்கிறேன்.. தகவல் கிடைத்த உடன், மாவட்ட நிர்வாகத்தை முடுக்கிவிட்ட பின்னரும், எல்லா உத்தரவை பிறப்பித்த பிறகும் என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை.. அன்றிரவே கரூர் புறப்பட்டேன்.. குழந்தைகள், பெண்கள் என 41 உயிர்களை நாம் இழந்துள்ளோம்.. உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் அறிவித்து வழங்கி உள்ளோம்..
காயமடைந்து சிகிச்சை பெறுவோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.. கரூர் சம்பவம் தொடர்பாக உண்மையான காரணத்தை ஆராய ஓய்வுபெற்ற அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.. ஆணையத்தின் விசாரணையின் அடிப்படையில் தமிழக அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும்..
சமூக ஊடகங்களில் கரூர் துயரம் குறித்து சில பரப்பக் கூடிய விஷமத்தனமான பொய் செய்திகளையும் வதந்திகளையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்.. எந்த அரசியல் கட்சி தலைவர்களும் அப்பாவி பொதுமக்களும், தொண்டர்களும் இறப்பதை எப்போதும் விரும்பமாட்டார்கள்.. உயிரிழந்தவர்கள் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களும் நம் தமிழ் உறவுகள் தான்.. எனவே சோகமும் துயரமும் சூழந்திருக்கும் நிலையில் கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்ப வேண்டாம். அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்..” என்று குறிப்பிட்டுள்ளார்..
தொடர்ந்து பேசிய அவர் “ நீதிபதி ஆணைய அறிக்கை கிடைத்த பின்னர், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி இதற்கான விதிகள், நெறிமுறைகள் வகுக்கப்படும்.. இந்த நெறிமுறைகளுக்கு எல்லோரும் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று நம்புகிறேன்.. தமிழ்நாடு எப்போதுமே நாட்டிற்கு முன்னோடியாக தான் இருந்துள்ளது.. இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடக்காமல் பார்த்துக் கொள்வது நம் அனைவரின் கடமை..” என்று குறிப்பிட்டுள்ளார்..
Read More : கரூர் துயரம்.. இரவில் பிரேத பரிசோதனை செய்யலாம்.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழக அரசு..