கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு கோரி பாஜக வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்..
கடந்த 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் கரூரில் பரப்புரையில் இந்த ஈடுபட்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது.. இது தொடர்பான விசாரணையை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரி தவெக உள்ளிட்ட பல்வேறு தரப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.. ஆனால் விசாரணை ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால் மனுவை ஏற்க முடியாது என்று கூறி நீதிமன்றம் சிபிஐ விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது..
இதை தொடர்ந்து தவெக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.. அதில் “ அதிக கூட்டம் வரும் என தெரிந்தும், உரிய இடத்தை ஒதுக்காது அரசு நிர்வாகமே முழு பொறுப்பேற்க வேண்டும்.. கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக போதிய அளவிலான பாதுகாப்பை அரசு வழங்கவில்லை.. மாநில காவல்துறை விசாரணையில் நம்பிக்கை இல்லை என்பதால் சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்.. இந்த கூட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கும் அரசு நிர்வாகம் தான் காரணம்.. எனவே கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக உண்மை நிலையை வெளிக் கொண்டு வர வேண்டும்.. இதற்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்.” என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..
மேலும் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தவெக சார்பில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் முறையிடப்பட்டது.. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வரும் 10-ம் தேதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு கோரி பாஜக வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.. விஜய் தரப்பில் இருந்து ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், அரசு சார்பில் ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு நடந்த ஒரு துயர சம்பவம்வாக இதை கருத வேண்டும். உள்ளூர் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தின் காரணமாக ஏற்பட்ட இந்த உயிரிழப்பு முறையாக விசாரிக்கப்பட வேண்டும்.. எனவே சிபிஐ அல்லது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும்..” என்று குறிப்பிட்டுள்ளார்.. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : Flash : கரூர் செல்கிறார் விஜய்.. 11 நாட்களுக்கு பின் டிஜிபி அலுவலகத்தில் தவெக மனு! அனுமதி கிடைக்குமா?