அரசியலுக்கு நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம் என்று கருத்து தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கரூர் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்..
விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் 41 பேர் பலியான விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரி தவெக உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.. குறிப்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரி 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.. இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்த போது “ பாதிக்கப்பட்டவர்களுடன் எந்த வகையிலும் தொடர்பில்லாதவர் மனு தாரர்.. அவருக்கு சிபிஐ விசாரணை கோர என்ன தகுதி உள்ளது.. நீதிமன்றத்தை அரசியல் மேடையாகக் வேண்டாம்.. போலீஸ் விசாரணையில் திருப்தி இல்லை என்றால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம்..
இந்த விவகாரம் தொடர்பான விசாரணை தொடக்க நிலையில் உள்ளது.. இப்போதே விசாரணையை மாற்றும் படி எப்படி கேட்க முடியும்? உங்கள் அரசியலுக்கு நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம்” என நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.. மேலும் சிபிஐ விசாரணை கோரியை மனுவை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.. சிபிஐ விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்வதாகவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்..



