தவெக தலைவர் விஜய் கரூரில் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலிலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கி உள்ளது.. இந்த சம்பவம் தொடர்பாக பல பொது நல மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாக்கல் செய்யப்பட்டன.. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் 3 மனுக்கள் முடித்து வைக்கப்பட்டது.. 4 மனுக்கள் தள்ளுபடி செய்யபப்ட்டது..
மேலும் முன் ஜாமீன் கோரி தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் தாக்கல் செய்த மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டது.. இந்த வழக்கு இன்று மதியம் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது புஸ்ஸி ஆனந்த் தரப்பு “ தாமதமாக வந்தது ஒரு குற்றமா? 7 மணி நேரம் தாமதமாக வந்ததற்காக வழக்குப்பதிவு செய்யலாமா? விஜய்யை பார்க்க வந்த கூட்டத்தை காவல்துறையினர் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும்.. தொண்டர்களை கொல்ல வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல.. ரவுடிகள் கூட்டத்திற்குள் புகுந்துவிட்டனர்… கூட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியது ஏன்? நாங்கள் போலீஸ் மீது பழி போடவில்லை.. குற்றம் தான் சுமத்துகிறோம்.. நாங்கள் ஒத்துழைப்பு தரவில்லை என்று எந்த போலீஸும் இதுவரை புகார் தரவில்லை..
திமுக கூட்டத்தில் ஏதேனும் நடந்தால் மாவட்ட செயலாளர், முதல்வர் மீது வழக்கு தொடர்வார்களா? எங்கள் கட்சிக்கு ஒரு நியாயம்? திமுகவுக்கு ஒரு நியாயமா? கூட்டத்திற்கு நடுவே காலி ஆம்புலன்ஸ் வந்தது ஏன்? அதனாலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.. நடந்தது ஒரு விபத்து.. கூட்டத்தை கட்டுப்படுத்தும் பொறுப்பு மாநில அரசுக்கும் காவல்துறைக்கும் தான் உள்ளது.. ஆனால் எங்களை கைது செய்ய துடிக்கின்றனர்..
எந்த எச்சரிக்கையும் இல்லாமல் லத்தி சார்ஜ் நடத்தியது தான் 41 பேர் பலியாக முதன்மை காரணம்.. கூட்டத்திற்கு அழைத்து யாராவது உயிரை பறிப்பார்களா? விபத்துகளை விபத்துகளாக பார்க்க வேண்டும்.. அதற்காக பொதுச்செயலாளர் மீது வழக்கு தொடர்வார்களா? இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் நாங்கள் இல்லை.. கரூர் மாவட்ட செயலாளர்கள் தான்.. ஆனால் மாநில நிர்வாகிகளை இந்த விசாரணைக்கு கொண்டு வந்துள்ளனர்..” என்று வாதிட்டது.. அப்போது நீதிபதி “ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யவில்லை என்றால் உங்களுக்கு பொறுப்பு இல்லையா? கரூர் மாவட்ட செயலாளர் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுவது எப்படி நியாயமாகும்.. ? என கேள்வி எழுப்பினார்..
ஆனால் புஸ்ஸி ஆனந்த் தரப்பின் இந்த வாதத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.. எந்த ஆதாரமும், சாட்சியும் இல்லாமல் குற்றம்சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது..என்று தெரிவிக்கப்பட்டது.. தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த் தரப்பு, நிலைமை மோசமடைந்திருந்தால் கூட்டத்தை நிறுத்த சொல்லி எங்களிடம் சொல்லி இருக்கலாம்..” என்று தெரிவித்தனர்..
தொடர்ந்து காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் “ புஸ்ஸி ஆனந்த், நிர்மல் இருவருக்கும் உள்நோக்கம் இல்லை.. ஆனால் பொறுப்பு உள்ளது.. விஜய் 12 மணிக்கு கரூருக்கு வருவார் என்று அறிவிக்கப்பட்டு, இரவு 7 மணிக்கு வந்தால் அது எப்படி சரியாக இருக்கும்? என்று தெரிவித்தனர்.. அப்போது காவல்துறை தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என நீதிபதி கேள்வி எழுப்பினர்.
அதற்கு காவல்துறை தரப்பு “ நாங்கள் கூட்டத்தை கலைக்க முயன்றோம்.. காலை முதல் தண்ணீர், உணவு என எதுவும் வழங்கவில்லை… தண்ணீர் தராததால் தான் இவ்வளவு பலி எண்ணிக்கை ஏற்பட்டது.. எந்த வசதியும் இன்றி 8 மணி நேரம் காத்திருக்க நாங்கள் அனுமதி வழங்கவில்லை.. உயரத்தில் இருந்து கீழே விழுந்ததால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.. கூட்ட நெரிசல் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டது.. விஜய் 12 மணிக்கு அங்கு வந்திருந்தால் அங்கு அவ்வளவு கூட்டம் கூடியிருக்காது. விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்ததால் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது.. சம்பவம் நடைபெற்ற உடனே தவெகவினர் தலைமறைவாகி விட்டனர்.. இதற்கு தார்மீக பொறுப்பை தவெக நிர்வாகிகள் தான் ஏற்க வேண்டும்..” என்று வாதிட்டது..
அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் புஸ்ஸி ஆனந்த் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தனர்.. இன்றே இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது…
Read More : கரூர் பெருந்துயரம்.. சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..