கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், கடந்த ஜனவரி மாதம், 12, 19 ஆகிய தேதிகளில் விஜய் டெல்லியில் விசாரணைக்கு ஆஜரானார்.
இந்த விவகாரத்தில் சிபிஐ 3-வது முறையாக விஜய்க்கு சம்மன் அனுப்பிய நிலையில் கடந்த 15-ம் தேதி விஜய் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார்.. அன்றைய தினமும் அவரிடம் சுமார் 7 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடந்தது..
இதனிடையே கரூர் துயர சம்பவம் தொடர்பாக செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியதாக தகவல் வெளியானது.. இதை தொடர்ந்து சி.பி.ஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில், அவர்களது கேள்விகளுக்கு நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளேன்.” என்று செந்தில் பாலாஜி கூறியிருந்தார்..
இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார். கரூர் தவெக பரப்புரை கூட்ட நெரிசலுக்கு கரூர் திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி தான் காரணம் என்று தவெக தொடர்ந்து புகார் கூறி வந்தது.. சம்பவ இடத்திற்கு முன் கூட்டியே ஆம்புலன்ஸ் எப்படி வந்தது? தண்ணீர் பாட்டில்கள் எப்படி வழங்கப்பட்டது? செந்தில் பாலாஜி உடனே எப்படி மருத்துவமனைக்கு சென்றார் என பல்வேறு கேள்விகளை எழுப்பிய தவெகவினர் கரூர் சம்பவம் முழுக்க முழுக்க திமுகவின் சதி தான் என்றும் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : NDA கூட்டணியில் தவெக இணையுமா? இணையாதா..? நயினார் நாகேந்திரன் பதிலால் குழப்பம்..!



