கரூர் துயரம்.. கைவிரித்த உயர்நீதிமன்றம்.. உச்சநீதிமன்றத்தில் தவெக மேல்முறையீடு.. எப்போது விசாரணை?

karur vijay supreme court

கரூர் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தவெக சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு வரும் 10- தேதி விசாரணைக்கு வர உள்ளது..

கடந்த 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் கரூரில் பரப்புரையில் இந்த ஈடுபட்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது.. இது தொடர்பான விசாரணையை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரி தவெக உள்ளிட்ட பல்வேறு தரப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.. ஆனால் விசாரணை ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால் மனுவை ஏற்க முடியாது என்று கூறி நீதிமன்றம் சிபிஐ விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது..


இதை தொடர்ந்து தவெக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.. அதில் “ அதிக கூட்டம் வரும் என தெரிந்தும், உரிய இடத்தை ஒதுக்காது அரசு நிர்வாகமே முழு பொறுப்பேற்க வேண்டும்.. கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக போதிய அளவிலான பாதுகாப்பை அரசு வழங்கவில்லை.. மாநில காவல்துறை விசாரணையில் நம்பிக்கை இல்லை என்பதால் சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்.. இந்த கூட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கும் அரசு நிர்வாகம் தான் காரணம்.. எனவே கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக உண்மை நிலையை வெளிக் கொண்டு வர வேண்டும்.. இதற்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்.” என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..

இந்த நிலையில் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தவெக சார்பில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் முறையிடப்பட்டது.. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வரும் 10-ம் தேதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளார்.

Read More : ஜாக்பாட் அறிவிப்பு..!! மாணவர்களுக்கு ரூ.30 லட்சம் வரை உதவித்தொகை வழங்கும் தமிழ்நாடு அரசு..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?

RUPA

Next Post

மருத்துவமனை பில் + இறுதிச்சடங்கு..!! ரோபோ சங்கருக்காக மனைவி செய்த நெகிழ்ச்சி செயல்..!!

Tue Oct 7 , 2025
நடிகர் ரோபோ சங்கரின் மறைவுக்குப் பல காரணங்கள் கூறப்பட்டன. மேடை நிகழ்ச்சிகளில் உடலில் பெயிண்ட்டை தடவி நடித்ததால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டுக் காலமானதாக தகவல்கள் பரவின. ஆனால், அவரது மகள் இந்திரஜா அதனை மறுத்து, உடல்நலக்குறைவால் தான் தனது தந்தை இறந்ததாக விளக்கம் அளித்தார். இதேபோல, ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தில் அவரது மனைவி பிரியங்கா நடனமாடியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கும் இந்திரஜா விளக்கம் அளித்திருந்தார். இந்த சூழலில் […]
Robo 2025

You May Like