கரூர் பெருந்துயரம்.. 7 நாட்களுக்கு பின் ஆறுதல் கூறிய தவெகவினர்! அப்ப விஜய் எப்போது செல்வார்?

TVK Vijay 2025 2

கடந்த சனிக்கிழமை கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியது.. இந்த தகவல் அறிந்த உடன் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டது..


ஆனால் இந்த பெருந்துயரத்திற்கு காரணமான தவெக தலைவர் விஜய்யோ அல்லது தவெகவினர் கரூருக்கு செல்லவில்லை.. விஜய் தனி விமானத்தில் புறப்பட்டு அன்றிரவே சென்னை வந்தடைந்தார்.. 3 நாட்களுக்கு பின் இந்த சம்பவம் குறித்து வீடியோ வெளியிட்ட நடந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்காமல், திமுக அரசை விமர்சித்து பேசியிருந்தார்.. மேலும் தனது வீடியோவில் அவர் வருத்தம் தெரிவிக்காததும், மன்னிப்பு கேட்காததும் அதிருப்தியை ஏற்படுத்தியது.. அதுமட்டுமின்றி “ சி.எம்.சார் என்ன பழிவாங்கணும்னா என்ன எது வேண்டுமானாலும் செய்யுங்க.. தொண்டர்கள் மீது கை வைக்காதீங்க..” என்று கூறியிருந்தார்.. விஜய்யின் இந்த பேச்சு சினிமா டயலாக் மாதிரி இருப்பதாக பலரும் விமர்சித்திருந்தனர்..

இந்த சூழலில் இதுதொடர்பான வழக்கில் தவெகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.. மேஎலும் “ கரூரில் நடந்தது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு.. சட்டத்தின் முன்பு அனைவரும் சமம்.. அரசு அமைதியாக இருக்க முடியாது.. யார் மீது தவறு உள்ளதோ அவர் மீது நடவடிக்கை வேண்டும்.. தவெக என்ன மாதிரியான கட்சி..? மக்களை கைவிட்டு தலைவரும் பொறுப்பாளர்களும் பொறுப்பற்ற முறையில் வெளியேறி உள்ளனர்.. தங்கள் தொண்டர்களை விட்டு விட்டார்கள்.. தலைமைத்துவ பண்பே இல்லை.. சம்பவத்திற்கு பொறுப்பேற்காத தவெகவுக்கு கடும் கண்டனம்..” என்று நீதிபதி காட்டமாக பேசினார்..

இந்த நிலையில் தவெகவினர் முதன் முறையாக பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.  தவெக கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பால சுப்பிரமணியன் தலைமையில் பாதிக்கப்பட்டோரை சந்தித்து தவெக நிர்வாகிகள் ஆறுதல் கூறினர்.. விரைவில் தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து நிவாரணம் வழங்குவார் என்றும் தவெக நிர்வாகிகள் உறுதியளித்துள்ளனர்..

விஜய் விரைவில் கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுவார் என்று கூறப்பட்டு வரும் நிலையில் அவர் எப்போது அங்கு செல்வார் என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை..

Read More : யூ டியூபர் மாரிதாஸ் கைது.. கரூர் விவகாரத்தில் அவதூறு பரப்பியதால் நடவடிக்கை!

RUPA

Next Post

பாலியல் தொழிலாளிகளை ரூமுக்கு அழைத்து வந்து கொடூரம்..!! சிங்கப்பூரில் சேட்டை செய்த தமிழர்கள்..!! கோர்ட் பரபரப்பு தீர்ப்பு..!!

Sat Oct 4 , 2025
சுற்றுலா விசாவில் சிங்கப்பூர் சென்று, அங்குப் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை மிரட்டி கொள்ளையடித்த வழக்கில், தமிழ்நாட்டை சேர்ந்த இருவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனையையும், 12 பிரம்பு அடிகளையும் விதித்து பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆரோக்கியசாமி டைசன் (23) மற்றும் ராஜேந்திரன் மயிலரசன் (27) ஆகிய இருவரும் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி சிங்கப்பூருக்கு சுற்றுலாப் பயணமாக சென்றுள்ளனர். 2 நாட்கள் கழித்து […]
Rape 2025

You May Like