கரூர் பெருந்துயரம்.. 2-வது முறையாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜர்..!

vijay cbi

கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது, கட்டுக்கடங்காத மக்கள் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், கடந்த 12-ம் தேதி அக்கட்சியின் தலைவர் விஜய் டெல்லியில் விசாரணைக்கு ஆஜரானார்.


அன்றைய தினம் விஜய்யிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.. அன்றூ விஜய்யிடம், கரூரில் மக்கள் சந்திப்புக்கு ஒதுக்கப்பட்ட இடம் குறுகிய இடம் என்று உங்களுக்கு தெரியுமா? மக்கள் எவ்வளவு பேர் கூடுவார்கள் என்று முன்கூட்டியே கணிக்கப்பட்டதா? கரூர் பிரச்சார கூட்டத்திற்கு நீங்கள் வருவதற்கு தாமதம் என்று கூறப்படுகிறதே அது உண்மையா? உண்மை எனில் தாமதமாக வர என்ன காரணம்? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் எழுப்பினர். மேலும் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய பாதுகாப்பு கொடுக்காததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக விஜய் கூறினார்..

அவரது பதில்கள் அனைத்தும் எழுத்துப்பூர்வமாகவும், குரல் பதிவாகவும் பதிவு செய்யப்பட்டன. பொங்கல் பண்டிகையை ஒட்டி விஜய், விசாரணைக்கு விலக்கு கோரிய நிலையில் அதனை சிபிஐ ஏற்றுக்கொண்டது.. அதன்படி விஜய் இன்று ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது..

இந்த நிலையில் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் 2-வது முறையாக விசாரணைக்கு விஜய் ஆஜரானார்.. விஜய் ஆஜரான நிலையில் சிபிஐ தலைமை அலுவலகம், சி.ஜி.ஒ காம்பிளக்ஸ் சாலையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.. கடந்த முறையை போலவே இந்த முறையும் விஜய்யிடம் இன்று நாள் முழுவதும் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது..

கரூரில் பெருந்துயரம் தொடர்பாக தவெக சார்பில் செய்யப்பட்ட ஏற்பாடுகள் என்னென்ன? மாவட்ட நிர்வாகம் என்னென்ன ஏற்பாடுகளை செய்தது குறித்து அதிகாரிகள் விஜய்யிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.. மேலும் இன்றைய விசாரணையில், பிரசாரக் கூட்டத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் ஒருங்கிணைப்பு தொடர்பான கூடுதல் விவரங்கள் கேட்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது..

Read More : Breaking : வாரத்தின் முதல் நாளே ஷாக்..! ஒரே நாளில் தாறுமாறு உயர்வு; புதிய உச்சம் தொட்ட தங்கம், வெள்ளி விலை..!

RUPA

Next Post

ஜிம்மிற்கு செல்ல தேவையில்லை.. வீட்டிலேயே கொழுப்பை குறைக்க உதவும் சிம்பிள் டிப்ஸ்!

Mon Jan 19 , 2026
கோடைக்காலம் உடல் எடையை குறைப்பதற்கு மிகவும் உகந்த நேரமாகும். இந்த காலகட்டத்தில், உடலின் வளர்சிதை மாற்றம் வேகமாகச் செயல்படுகிறது. அதிகப்படியான வியர்வை காரணமாக, உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பை விரைவாகக் கரைக்க முடியும். அதனால்தான், இந்த கோடைக்காலத்தைப் பயன்படுத்தி உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், சரியான பயிற்சிகளைச் செய்தால் நல்ல பலன்களைப் பெறலாம். உங்களுக்கு உடற்பயிற்சிக் கூடத்திற்குச் செல்ல வாய்ப்பு இல்லாவிட்டாலும், வீட்டிலேயே எளிதாகக் கொழுப்பைக் குறைக்கும் பயிற்சிகளைச் செய்யலாம். எந்தவொரு […]
losing weight 1

You May Like