கரூர் பிரச்சார கூட்டத்தில் நடந்த துயர சம்பவத்திற்கு பிறகு விஜய் வீட்டில் இருந்து வெளியே வந்தார்..
கடந்த சனிக்கிழமை கரூரில் தவெகவின் பிரச்சாரக் கூட்டத்தில் விஜய் உரையாற்றினார்.. ஆனால் குறித்த நேரத்தை விட விஜய் மிகவும் காலதாமதமாக வந்ததால் காலை முதல் காத்திருந்த தொண்டர்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டனர்.. விஜய் அப்பகுதிக்குள் நுழைந்த போதே பலர் மயங்கி விழுந்த நிலையில், அவர் கிளம்பிய பின்னர் கேட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி பலர் உயிரிழந்தனர்.. தற்போது வரை பலி எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது.. மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்..
இந்த சம்பவம் நடந்த உடனே அமைச்சர்கள் அங்கு விரைந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் இரவோடு இரவாக கரூர் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும் இந்த கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.. மேலும் இந்த சம்பவம் குறித்து ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்தும் உத்தரவிட்டார். அதன்படி நீதியரசர் அருணா ஜெகதீசன் கரூரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்..
இதை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.. எனினும் இந்த சம்பவத்திற்கு காரணமான தவெக கட்சியினரோ அக்கட்சி தலைவர் விஜய்யோ இதுவரை கரூருக்கு செல்லாதது அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி பொதுமக்களிடையேயும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.. விஜய் கரூரில் இருந்து சென்னை சென்றிருக்க கூடாது என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை தவிர்த்த விஜய் சனிக்கிழமை இரவு சென்னை திரும்பிய விஜய், தனது வீட்டில் இருந்து வெளியே வரவும் இல்லை.. நேற்றும் செய்தியாளர்களை சந்திப்பாரா என்று எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் விஜய் தனது வீட்டை விட்டு வெளியே வரவில்லை. மாறாக எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்த விஜய், நேற்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்..
இந்த நிலையில் கரூர் பிரச்சார கூட்டத்தில் நடந்த துயர சம்பவத்திற்கு பிறகு விஜய் வீட்டில் இருந்து வெளியே வந்தார்.. அவர் பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். கடந்த 27-ம் தேதி நடந்த சம்பவத்திற்கு பிறகு நீலாங்கரையில் உள்ள தனது வீட்டிற்கு சென்ற விஜய் நேற்று முழுவதும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.. தவெக கூட்ட நெரிசலில் சிக்கி பலியானாரின் குடும்பத்தினரை விஜய் நேரில் பார்க்கவில்லை என பலரும் குற்றம் சாட்டி வந்த நிலையில் அவர் தற்போது தனது பாதுகாவலர்களிடம் கூட சொல்லாமல் காரில் புறப்பட்டு சென்றார்.. பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் விஜய் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது..
Read More : கரூர் துயர சம்பவம்.. தவெக தலைவர் விஜயுடன் 15 நிமிடம் பேசிய ராகுல் காந்தி..!! இருவரும் என்ன பேசினார்கள்..?